மும்மணிகள் (பௌத்தம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மும்மணிகள் அல்லது திரிசரணம் (three jewels, மூன்று இரத்தினங்கள்) என்பது பௌத்தர்கள் சரணம்(பௌத்தம்) அடையும் மூன்று விடயங்களைக் குறிக்கும். இதனைத் திரிசரணம் எனவும் குறிப்பிடுவதுண்டு.[1]


மூன்று மணிகள்:
Remove ads
திரிசரணம்
இந்த திரிரத்தினங்களிடம் சரணம் அடைதல், பௌத்த சடங்குகளில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மஜ்ஜிம நிகாயத்தில் குழந்தை பருவத்தில் உள்ளவர்களின் சார்பாகவும், பிறக்காத குழந்தைகளின் சார்பாகவும் கூட பிறர் சரணமடையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. திரிரத்தினங்களிடம் சரணம் அடைதல் ஒருவதை அதிகாரப்பூர்வமாக பௌத்தராக ஆக்குவதாக பொதுவாக நம்பப்படுகிறது. எனவே, தேரவாத நாடுகிளில், புத்த பிக்ஷுகளும் இதை அவ்வப்போது உச்சாடனம் செய்வர்.
|
இந்த திரிசரணத்தின் சீன/ஜப்பானிய மகாயன பதிப்பு, தேரவாத பதிப்பில் இருந்து சிறிதளவே வேறுபடுகிறது.
|
திபெத்திய பௌத்த சரணம்
|
Remove ads
முக்கியத்துவம்
பௌத்தத்தில் திரிரத்தினங்களிடம் சரணம் அடைதல் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது. இந்த வழக்கம் மனதில் புத்தம், தர்மம் மற்றம் சங்கத்தின் பிரதிபிம்பமாக கருதப்படுகிறது. இந்த குணங்கள் மஹாபரிநிப்பான சூத்திரத்தில் தர்மத்தின் பளிங்கு என அழைக்கப்படுகிறது. இது பளிங்கு போன்ற மனத்தினை அடைய உதவுவதாக கூறப்படுகிறது.

கலைகளில் திரிரத்தினங்கள்

கீழிருந்து மேலாம், திரிரத்தின சின்னம், கீழ்க்கண்ட கூறுகளை கொண்டுள்ளது.
- வட்டத்தினுள் உள்ள தாமரை
- வஜ்ரம்
- ஆனந்த சக்கரம்.
- திரிசூலம், மூன்று முனைகளும் முறையே புத்தத்தையும், தர்மத்தையும், சங்கத்தையும் குறிக்கிறது
புத்த பாதத்தில் திரிரத்தினத்தை சித்தரிக்கும் போது, திரிசக்கரத்தினை சுற்றி தர்ம சக்கரம் இடப்படுகிறது. திரிரத்தின சின்னம் சாஞ்சியில் உள்ள கொடிக்கம்பத்தில் (கி.மு இரண்டாம் நூற்றாண்டு) உள்ள சிற்பங்களில் காண முடியும். மேலும் புத்த பாதத்திலும் இது காணப்படுகிறது
கி.மு முதலாம் நூற்றாண்டில், பஞ்சாப் பகுதியை ஆண்ட குனிந்தர்கள் வெளீயிட்ட நாணயங்களில், இந்த திரிரத்தின சின்னம், ஸ்தூபியின் மீதுள்ளதாக பொறிக்கப்பட்டுள்ளது. குஷன் அரசர்கள் வெளியிட்டுள்ள சில நாணயங்களிலும் இது காணப்படுகிறது. இந்த திரிரத்தினம் சுற்றி மூன்று தர்மசக்கரங்களும் அவ்வப்போது இடப்படுவதுண்டு. இந்துக்களால் திரிரத்தின சின்னம் நந்திபாதம் என அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads