முரசாக்கி சிக்கிபு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முரசாக்கி சிக்கிபு (紫|紫式|式部|部; (சுமார் 973- சுமார் 1014 அல்லது 1025) (ஆங்கிலத்தில் சீமாட்டி முரசாக்கி), ஜப்பான் நாட்டில் ஹையன் காலகட்டத்தில் அரசவையில் பணிபுரிந்த பெண் நாவலாசிரியரும் புலவருமாவார். அவர் கி.பி 1000 வாக்கில் எழுதிய "ஜெஞ்சியின் கதை" என்ற புதினத்தால் புகழ்பெற்றவர். இது ஜப்பானின் ஆரம்ப கால புதினங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.



முரசாக்கி சிக்கிபு அவரது இயற்பெயரன்று. அவரது உண்மையான பெயர் எதுவென பல ஊகங்கள் நிலவுகின்றன.[1] அவரது நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரே அவருக்கு முரசாக்கி என செல்லப் பெயராயிற்று. சிக்கிபு என்பது அவரது தந்தையின் பதவி குறித்து வந்ததாகும்.
Remove ads
வாழ்க்கை வரலாறு
சீமாட்டி முரசாக்கி சுமார் 973இல் ஜப்பானின் கியோட்டோவில் ஒரு சிறிய அரசகுடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த அவரை, அப்போதைய பழக்கவழக்கங்களுக்கு மாறாக, கல்வியாளரும் அரசவையில் முக்கிய அதிகாரியாகவும் இருந்த தந்தையாரே வளர்த்தார். ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இலக்கியத்தை கற்க அவருக்கு உதவினார். இருபதுகளில் திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் மகவுக்கு, (தைனி நோ சான்மி) தாயானார். அவர் மகளும் பின்னாளில் ஒரு கவிதாயினியாக பரிமளித்தார்.[2]
அரண்மனையில் அரசி சோஷிக்கு தோழிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். சுமார் 1014-இல் அவரது தந்தை திடீரென கியோட்டோ திரும்பிய காலத்தில் இறந்தார் எனவும் அல்லது தனது 50ஆம் வயதுகளில் 1025-1031 காலகட்டத்தில் இறந்திருக்கலாம் எனவும் ஊகங்கள் நிலவுகின்றன.
மூன்று ஆக்கங்கள் அவருடையதாக கொள்ளப்படுகின்றன:
- ஜெஞ்சியின் கதை (The Tale of Genji)
- முரசாக்கி சிக்கிபுவின் நாட்குறிப்பு (The Murasaki Shikibu Diary)
- முரசாக்கி சிக்கிபு தொகுப்பு (The Murasaki Shikibu Collection) - அவரது 128 கவிதைகளை தொகுத்து அவரது மறைவிற்குப்பின் வெளியிடப்பட்டது.
Remove ads
ஜெஞ்சியின் கதை - புதினம்
இந்த புதினம் உலகின் முதல் புதினம் என்றும், ஜப்பான் இலக்கியத்தில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது என்றும் குறிப்பிடுவர். இது உலகின் முதல் உளவியல் புதினம். இந்த புதினம் ஆங்கிலத்தில் பல முறை மொழி பெயர்க்கப்பட்டது .இதில் 1100 பக்கங்களும், 54 அத்தியாயங்களும் உள்ளன. ஹீயான் காலத்தில் எழுதப்பட்ட புதினம். இந்தப் புதினத்தைத் தழுவி பல மங்கா எனப்படும் ஜப்பானிய வரைகதை ஜப்பான் மக்கள் இடைய பெரும் வரவேற்பைப் பெற்றது. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பல ஜப்பானிய மாணவர்கள் இப்புதினத்தின் தேர்ந்து எடுக்கப்பட்ட சில பகுதிகளை ஜப்பானியமொழி வகுப்பில் பயிலுகின்றனர்.
Remove ads
சீமாட்டி முரசாக்கி சிக்கிபுவின் நாட்குறிப்பு
இந்த நாட்குறிப்பு 10ஆம் நூற்றாண்டின் கடைசி காலகட்டத்தையும் 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியையும் கொண்டு இருக்கும். 9 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தபட்ட கானா எழுத்துமுறை (kana) அப்போது அரசவையில் கவிதை எழுத மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. 10ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரைநடை எழுதவும் தொடங்கப்பட்டது. மற்ற நாட்குறிப்புகளைப் போல் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வரிசைப்பட்டியல் இந்த நாட்குறிப்பில் இருக்காது. கானா என்ற பேச்சு மொழியில் இருந்து எழுத்து மொழியாக உருபெற்று வலுவடைந்தது. இந்த நாட்குறிப்பு மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதியில் அரசகுமாரி சோஷி அவர்களுக்கு பிறந்த குழந்தை பற்றிய மிக விரிவான விளக்கத்தினைக் கொண்டிருக்கும். இதன் இரண்டாம் பாகம் ஒரு நெடும் கடிதம்போல் எழுதப்பட்ட கவிதை ஆகும். அக்காலத்தில் அவர்கள் தங்கி இருந்த அரண்மனையில் வாழ்ந்த மற்றவர்கள் அணியும் கிமோனோ ஆடை பற்றியும், அரசவையில் இருந்த பெண்கள் கல்வி கல்லாதவர்கள் ஆக இருந்ததையும் பற்றி சுட்டிக்காட்டுகிறார். அவருடைய சொந்த வாழ்க்கை குறித்த ஒரு சில செய்திகள் இதில் இடம் பெறுகின்றன. அதில், அவர் அரசவையில் பணிக்கு வரும் முன் அவரது இளமைக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை கூறியுள்ளார். அவருடைய அண்ணன் இளம் வயதில் சீனம் கற்றுவந்தார். அவருடைய தந்தைக்கு அவரைப் பெரும் சீன அறிஞர் ஆக்கவேண்டும் என்பது நெடுநாள் ஆசை. அவரின் சகோதரர் சீனம் கற்கும் பொழுது இவரும் உடன் இருப்பார். அவரின் சகோதரரை விட இவர் மிக எளிதில் சீன மொழியைக் கற்றுக்கொண்டார். பல நேரங்களில் அவரின் தமையனார் மொழியை பேசத் தடுமாறும் போது அவருக்கு உடனே வாக்கியங்களை எடுத்துக் கொடுப்பார். இதனைக் கண்ட அவருடைய தந்தை மகிழ்ச்சி அடைந்து இவர் ஏன் ஆணாக பிறந்து இருக்கக் கூடாது, அப்படிப் பிறந்து இருந்தால் அங்கு எவ்வளவு பெருமை சேர்த்து இருப்பாய் என்று கூறுவாராம். தன் நாட்குறிப்பில் அவர் தமது ஜெஞ்சியின் கதை புதினத்தைப் பற்றி பெரிதும் குறிப்பிடவில்லை.
ஜப்பானிய பண்பாட்டில் தாக்கம்
முரசாக்கி ஜப்பானிய இலக்கியத்தில் ஒரு சிறந்த ஆசிரியராக கருதப்படுகிறார். அவரை நினைவுகூரும் வகையில் ஜப்பானில் பல இடங்களில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவரது ஆக்கங்கள் கல்வித் திட்டங்களில் சிறப்புப் பகுதியாக அமைகின்றன. அவரது சிறந்த காவியமான ஜெஞ்சியின் கதையின் நினைவாக 2000 யென் மதிப்புள்ள நோட்டு வெளியிடப்பட்டுள்ளது.
பன்னாட்டு வெளியீடுகள்
- முரசாக்கியின் வாழ்க்கையை ஒட்டி லிசா டால்பி ஒரு கற்பனை வாழ்க்கை வரலாறு எழுதியுள்ளார்: The Tale of Murasaki: A Novel.
- அதேவண்ணம் இத்தாலிய மொழியில் காபரில்லா மாக்ரினி ஒரு புதினம் எழுதியுள்ளார்: Mille Autunni, vita di Murasaki Dama di Corte, Edizione Frassinelli 1985;
- இத்தாலிய புதினத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். La dame de Kyoto, Editions Belfond, 1987, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-7144-1973-9.
- பின்னாளில் ஹன்னிபால் ரைசிங்க் என திகில்படமாக வெளியான தாமஸ் ஹாரியின் நாவலில் சீமாட்டி முரசாக்கியின் கற்பனை சந்ததி ஒருவர் முக்கிய கதாபாத்திரமாக சித்திரிக்கப்பட்டுள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads