முருத்-ஜாஞ்சிரா

From Wikipedia, the free encyclopedia

முருத்-ஜாஞ்சிராmap
Remove ads

முருத் ஜஞ்சிரா (Murud-Janjira - मुरुद जानजीरा) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தை ஒட்டிய கடற்கரையிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அரபிக் கடலில் உள்ள சிறு தீவில் 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்த கடற்கோட்டை ஆகும்.[1] முட்டை வடிவ பாறை மீது கட்டப்பட்ட முருத்-ஜாஞ்சிரா கோட்டை, முருத் துறைமுக நகரத்திற்கு தெற்கே 5.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோட்டை மீது 36 பீரங்கிகள் வைக்கப்படும் காவல் கோபுரங்கள் உள்ளது. அதில் 3 பீரங்கிகள் மிகவும் எடையும், அதிக சுடுதிறனும் கொண்டது.[2] தற்போது சிதிலமடைந்த இக்கோட்டையில் சிறு பள்ளிவாசல், இராணுவக் குடியிருப்புகள், இரண்டு நன்னீர் குளங்கள் உள்ளது.[3] ஜாஞ்சிரா இராச்சியத்தை 1948 வரை ஆண்ட சித்தியர்கள் ஆளுகைக்குள் 1676 முதல் இக்கோட்டை இருந்தது.

விரைவான உண்மைகள் முருத்-ஜாஞ்சிரா, இருப்பிடம் ...
Thumb
ஜாஞ்சிரா கோட்டை
Thumb
முருத்-ஜாஞ்சிரா கோட்டையின் நுழைவாயில்
Thumb
கோட்டையின் உட்புறக்காட்சி

15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பழமையான கடல் கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக உள்ளது. இக்கோட்டை தன் வலிமைக்கு பிரபலமானது. இடாய்ச்சுக்காரர்கள், மராத்தியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் தாக்குதல்களை எதிர்த்த வரலாற்றைக் கொண்ட இந்தக் கோட்டை, பலரால் கையளிக்கப்பட்டு இன்று பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது.

Remove ads

வரலாறு

Thumb
முருத்-ஜாஞ்சிரா கோட்டையின் 22 டன் எடை கொண்ட பெரிய பீரங்கி
Thumb
கோட்டைக்கு வெளியே இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் அறிவிப்பு பலகை

இந்த கோட்டை முதன்முதலில் 15ஆம் நூற்றாண்டில் தற்போதைய மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டதை ஒட்டி அரை கிலோ மீட்டர் தொலைவில் அரபிக் கடலில் உள்ள தீவில் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை முதலில் கோலி மீனவர்களால் கட்டப்பட்டது. குஜராத் சுல்தானகத்தின் அப்போதைய ஆட்சியாளரின் கீழிருந்த இக்கோட்டை கைப்பற்ற, முகலாயப் பேரரசின் ஒரு இராணுவப் பிரிவான ஆப்பிரிக்க-அரபு வம்சாவளியைச் சேர்ந்த சித்தியர்கள் அனுப்பப்பட்டனர். 1676 ஆண்டு முதல் ஜாஞ்சிரா இராச்சியத்தின் ஆட்சியாளர்களாக திகழ்ந்த சித்தியர்கள்[4] கோட்டையைக் கைப்பற்றி மரம் மற்றும் கற்களால் புதுப்பித்தனர். 22 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை எந்த விதமான இராணுவத் தாக்குதல்களையும் எதிர்க்கும் வகையில் இருந்தது. சித்தியர்களின் சிறப்பான கட்டுமானமே கோட்டையின் வலிமைக்குக் காரணம். போர்த்துகீசியர்கள் மற்றும் மராத்தியர்கள் உள்ளிட்டோர் இக்கோட்டையைக் கைப்பற்றுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் சித்தியர்கள் தப்பிப்பிழைத்தனர். சிவாஜியின் தலைமையில், மராட்டியப் பேரரசு ஆட்சிக்கு வந்தபோது, இந்தக் கோட்டை, சிவாஜிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால் ஏழு முறை தாக்கப்பட்ட போதிலும், இந்த கோட்டை சிவாஜியிடம் சரணடையவில்லை. கடைசியில் சிவாஜி அந்த முயற்சியைக் கைவிட்டார். சிவாஜிக்குப் பிறகு அவரது மகன் சம்பாஜியும் கோட்டையைக் கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்தார். இறுதியாக, 19 ஏப்ரல் 1736 அன்று மராட்டிய தளபதி சிம்னாஜி அப்பாவின் தலைமையில் மராட்டிய பேஷ்வா பாஜி ராவின் படைகள் ரிவாஸ் போரில் சித்தியர்களை தோற்கடித்து இக்கோட்டையைக் கைப்பற்றினர். பின்னர் 1818ல் மூன்றாம் ஆங்கிலேய-மராட்டியப் போரில் ஆங்கிலேயர்கள் இரண்டாம் பாஜி ராவை தோற்கடிக்கும் வரை இக்கோட்டை மராட்டியர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

Remove ads

இன்று

இன்று இந்த கோட்டை முக்கிய சுற்றுலா ஈர்ப்புத் தலமாக உள்ளது. கோட்டையின் உள்ளே நன்னீர் வழங்கும் இரண்டு குளங்கள் உள்ளது. கடலின் நடுவில் உள்ள இத்தீவுக் கோட்டையில் இந்த நன்னீர் ஆதாரம் இயற்கையின் அதிசயம்.

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads