முஷ்தாக் அகுமது
பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முஷ்தாக் அகுமது மாலிக் (Mushtaq Ahmed Malik (Urdu: مشتاق احمد مل பிறப்பு: சூன் 28. 1970), முன்னாள்பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். தற்போது இவர் பாகித்தான் அணியின் தலைமை சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ளார். இடதுகை சுழற் பந்துவீச்சாளரான இவர் உலகின் தலைசிறந்த மூன்று சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். கூக்ளி பந்தினை சிறப்பாக வீசியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இவர் 52 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 144 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1990 இலிருந்து 2003 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தேர்வுப் போட்டிகளில் 185 இலக்குகளையும் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 161 இலக்குகளையும் கைப்பற்றியுள்ளார்.2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார்.
இவர் 1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் கோப்பை வென்ற பாக்கித்தான் அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். 1997 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு இவரை ஹால் ஆஃப் ஃபேமாக அறிவித்தது. இவர் சசக்ஸ் மாகாணத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். இவரின் காலத்தில் மாகாணத் துடுப்பாடட்ப் போட்டிகளில் அதிக இலக்குகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும் 2003, 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் சசெக்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு உதவினார்.
Remove ads
சர்வதேச போட்டிகள்
1987 ஆம் ஆண்டில் தனது 16 ஆவது வயதில் பாக்கித்தான் அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார்[1]. சுக்குர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் முல்தான் அணி சார்பாக விளையாடினார். இந்தப் போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இவர் நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார்.[2] இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் பஞ்சாப் முதலமைச்சர் லெவன் அணி சார்பாக விளையாடினார்.[3] இந்தப் போட்டியில் முதல்முறையாக ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். பின் 1988 ஆம் ஆண்டில் நடைபெற்ற 198 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் பாக்கித்தான் அணி சார்பாக விளையாடினார். இந்தத் தொடரில் மொத்தம் 19 இலக்குகளை 16.21 எனும் சராசரியில் கைப்பற்றினார்[4]. இந்தத் தொடரில் இருதிப்போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியிடம் ஐந்து இலக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதற்கு அடுத்த தொடரில் முதல் முறையாக பத்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[5] பெசாவர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஆட்டப்பகுதியில் 6 இலக்குகளையும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 8 இலக்குகளையும் கைப்பற்றினார்.[6] இந்தத் தொடரின் முடிவில் 52 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 22.84 ஆகும்.[7] பின் 19 வயதிற்குட்பட்ட பாக்கித்தான் அணியில் இடம்பெற்றார்.இதில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான துடுப்பாட்டப் போட்டியில் 26 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணியின் சக வீரர்கள் எடுத்த இலக்குகளின் எண்ணிக்கையில் இருமடங்கு இலக்குகளை இவர் கைப்பற்றினார்.[8] முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இவர் 1989 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டார்.[1]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads