மு. காதர்சா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
முகமது காதர்சா (M. Kadharsha)(பிறப்பு அக்டோபர் 6, 1935) என்பவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஏப்ரல் 3, 1974 முதல் ஏப்ரல் 2, 1980 வரையிலும், சூலை 25, 1983 முதல் சூலை 24, 1989 வரையிலும் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[1]
Remove ads
அரசியல்
திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளராக எம்.ஜி.ஆர் காலத்தில் நீண்ட காலம் பணியாற்றினார்.[2]
குடும்பம்
காதர்சா 6, அக்டோபர், 1935 அன்று திண்டுக்கல் வி.எம்.ஆர் பட்டியில் கே. முகமதுக்கு மகனாகப் பிறந்தார். இவர் இளங்கலை வரை படித்துள்ளார். காதர்சா இலைலா என்பாரை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads