மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று மும்மணிக்கோவை.

இதன் ஆசிரியர் அதிராவடிகள் (அதிரா அடிகள்); காலம் எட்டாம் நூற்றாண்டு

அகவல், வெண்பா, கட்டளைக்கலித்துறை என்னும் மூவகைப் பாடல்கள் மாறி மாறித் தொடர்ந்துவரும் 30 பாடல்கள் கொண்ட நூல் இது. 24 முதல் 30 வரை இருந்த பாடல்கள் இப்போது கிடைக்கவில்லை.

பாடல்கள்

அகவல் (பாடல் எண் 22)
சிரமே, விசும்பு போத உயரி இருண்டு அசும்பு பொழியும்மே
கரமே, வரைத் திரள் முரணிய விரைத்து விழும்மே
புயமே, திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்கும்மே
அடியே, இடுந்தொறும் இவ்வுலகம் பெயரும்மே
ஆயினும், அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ
நெஞ்சகத்து ஒடுங்கும் ஓம் நெடும்பனைச் சூரே. [1]
அகவல் (பாடல் எண் 4)
பேதுறு தகையம் அல்லது தீதுறச்
செக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொங்கல் நாப்பண்
புக்கவன் இரும்பொறித் தடக்கையும்
முரணிய பெருந்தோள்
கொட்ட நாவி தேவிதன்
மட்டுகு தெரியல் அடி மணந்தனமே.[2]
வெண்பா (பாடல் 17)
அலங்கல் மணிக்கனகம் உந்தி அருவி
விலங்கல் மிசைஇழிவ(து) ஒக்கும் – பலன்கனிகள்
உண்டளைந்த கோன்மகுடத்து ஒண்கடுக்கைத் தா(து)அளைந்து
வண்(டு)அணைந்து சோரும் மதம்.[3]
கட்டளைக்கலித்துறை (பாடல் 12)
காலது கையது கண்ணது தீயது கார்மதநீர்
மேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம்
பாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண்
மேலது வானது நான்மறைக் கின்ற விடுசுடர்க்கே.[4]
Remove ads

காலம் கணித்த கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads