மூன்றாம் நசீர் உதின் முகம்மது சா
தில்லி சுல்தானகத்தின் 22வது சுல்தான் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முகமது சா சுல்தான் (Muhammad Shah) என்றும் அறியப் படும் மூன்றாம் நசீர் உத்-தின்-முகம்மது சா பிரூசு சா துக்ளக்கின் மகனும் மற்றும் துக்ளக் வம்சத்தின் ஆட்சியாளரும் ஆவார்.[1]
Remove ads
வாழ்க்கை
முகமது சா, தனது மாமா சுல்தான் அபுபக்கர் சா துக்ளக் தில்லி சுல்தானகத்தின் துக்ளக் வம்சத்தின் ஆட்சியாளராக் இருந்தபோது அவரை எதிர்த்தார். மேலும் தில்லி சிம்மாசனத்தின் மீது உரிமை கோரி அபு பக்கருக்கு எதிராக போராடினார். ஆகஸ்ட் 1390 இல், இவர் தில்லி மீது தாக்குதலைத் தொடங்கினார். இறுதியில் அபு பக்கர் தோற்கடிக்கப்பட்டார். பின்னர், முகமது சா கி.பி. 1390 முதல் 1394 வரை ஆட்சி செய்தார். அபு பக்கரின் தோல்விக்குப் பிறகு, முகமது சா அவரை மீரட் கோட்டையில் சிறையில் அடைத்தார். அங்கு அவர் விரைவில் இறந்தார். முகமது சா 1394 ஜனவரி 20 அன்று இறப்பதற்கு முன் நான்கு ஆண்டுகள் தில்லி சுல்தானகத்தை ஆட்சி செய்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads