மூலம் (நோய்)

பவுத்திரம் நோய் திர From Wikipedia, the free encyclopedia

மூலம் (நோய்)
Remove ads

மூலம் (HEMORROIDS), என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்தக்கூடியது. மூல நோய் மலச் சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக் கூடியது.[1]

விரைவான உண்மைகள் மூலம் Hemorrhoids, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
Thumb
வெளி மூலம்

மூல நோயை உள்மூலம், (Internal piles), வெளிமூலம் (External piles), பவுத்திர மூலம் (Fistula) மூன்று வகைகள் உள்ளது. அறுவை சிகிச்சையால் மட்டுமே மூல நோய்களைக் குணப்படுத்த இயலும்.

Remove ads

உள் மூலம்

மலத் துளையின் உட்பகுதியில் சவ்வு படர்ந்து, மலம் கழிக்கும்போது மலக் குழாயின் உட்புறம் உள்ள தசைகள் உப்பி வெளிப்புறம் நீண்டு வரும். இதனால் மலம் வெளிப்படுதல் சிக்கலாகி இரத்தம் வெளியேறும்.

வெளி மூலம்

மலத்துளையின் அருகில் சிறிது சதை வளர்ந்து தொங்கும். இப்பகுதியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதுடன், மலம் வெளியேறும்போது இரத்தமும் சிந்தும்.

பவுத்திர மூலம் (FISTULA)

உள் மூலம் முதிர்வதால் பவுத்திரம் தோன்றுகிறது. பவுத்திர நோய் தோன்றுகையில் மலத்துளையைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு துளைகள் தோன்றி அதனின்று தூய்மையற்ற சீழ் வெளிவரும்.

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads