மெகர்-உன்-நிசா பேகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெகர்-அன்-நிசா பேகம் (Mehr-un-nissa Begum) (1605-1652) இலாத்லி பேகம் என்றும் அழைக்கப்படும் இவர் ஜஹாங்கீர் மனைவி நூர் சகானைன் மகளாவார்.
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
இவர், சேர் ஆப்கான் கான் என்ற பட்டத்தை வகித்த அலி குலி பேக்கின் மகளாவார். [1] . [2] இவரது தாயார் மெகர்-உன்-நிசா கானும், இர்மாத்-உத்-தௌலா என்றும் அழைக்கப்பட்ட மிர்சா கியாசு பேக்கின் மகளும், பேரரசர் ஷாஜகானின் மனைவியான பேரரசி மும்தாஜ் மகாலின் முதல் உறவினருமாவார். [3] 1607 இல் சேர் ஆப்கானின் மரணத்திற்குப் பிறகு, இவரும் இவரது தாயாரும் ஆக்ராவுக்கு ஜஹாங்கிர் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டனர். இவரது வளர்ப்பு தாய் பேரரசி ருகையா சுல்தான் பேகம், மறைந்த பேரரசர் அக்பரின் மனைவியாவார். [4] 1611 ஆம் ஆண்டில், இவரது தாயார் பேரரசர் ஜஹாங்கீரை மறுமணம் செய்து கொண்டார். மேலும் பேரரசி நூர் சகான் பேகம் என்றும் அறியப்பட்டார். [5]
1617 ஆம் ஆண்டில், நூர் சகானும் அவரது சகோதரர் ஆசாப் கானும், ஜஹாங்கிரின் மூத்த மகனான இளவரசர் குசுராவ் மிர்சாவுடன் இவரைத் திருமணம் செய்து வைக்கவும், இளவரசர் குர்ரம் மிர்சாவுக்கு (வருங்கால பேரரசர் ஷாஜகான்) பதிலாக, அவரை வாரிசாக உருவாக்கவும் திட்டமிட்டனர். இருப்பினும், குசுராவ் இவர்களின் வாய்ப்பை மறுத்துவிட்டார். [6]
Remove ads
திருமணம்
இவருக்கு பதினாறு வயதாக இருந்தபோது, [7] ஜஹாங்கிர் தனது மகன் சாக்யார் என்பவருக்கு 1621 ஏப்ரல் 23திருமணம் செய்து வைத்தார். [8]
1623 செப்டம்பர் 13 அன்று இவர்களுக்கு அர்சானி பேகம் என்ற மகள் பிறந்தார். [9]

1627 அக்டோபர் 28 அன்று ஜஹாங்கிர் இறந்தார். இவரது தாயார் நூர் சகான் விரும்பியபடி இவரது கணவர் சாக்யார் லாகூர் அரியணையில் ஏறினார். [10] பின்னர், ஷாஜகான் 16 சனவரி 1628 அன்று அரியணையில் ஏறினார். சனவரி 23 அன்று, சாக்யார், இளவரசர் தேனியல் மிர்சாவின் மகன்களான தாமுராசு மிர்சா, கோசாங் மிர்சா ,இளவரசர் குசுராவ் மிர்சாவின் மகன்கள் தாவர் பக்ச் மிர்சா மற்றும் கர்சாப் மிர்சா ஆகியோரை தூக்கிலிட உத்தரவிட்டார். [10]
Remove ads
கடைசி ஆண்டுகள்
இருபத்தி இரண்டு வயதுடைய இளம் விதவையான இவர் தனது தாயுடன் லாகூரில் குடியேறினார். இவர்கள் இருவரும் எளிமையான மற்றும் கடினமான வாழ்க்கை வாழ்ந்தனர். இவரது தாயார் நூர் சகான் 1645 இல் இறந்தார். அவரது கணவர் ஜஹாங்கிருக்கு அருகில் ஒரு தனி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பேரரசர் ஷாஜகானிடமிருந்து பெற்ற நிதியிலிருந்து அக்கல்லறையைக் கட்டியிருந்தார். [11] இவரது மரணத்திற்குப் பிறகு, இவரும் இவரது தாயின் அருகில் அடக்கம் செய்யப்பட்டார். [12]
குறிப்புகள்
நூலியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads