மும்தாசு மகால்

முகலாய பேரரசி மற்றும் ஷாஜகானின் மனைவி From Wikipedia, the free encyclopedia

மும்தாசு மகால்
Remove ads

மும்தாஜ் மகால் (Mumtaz Mahal, செப்டம்பர் 1, 1593 சூன் 17, 1631) ) தாஜ்மகாலை உருவாக்கிய முகலாயப் பேரரசு மன்னனான ஷாஜகானின் மனைவி ஆவார். இவரது இயற்பெயர் அர்சுமந்த் பானு பேகம், 1593 இல் இந்தியாவில் ஆக்ராவில் பிறந்தவர். இவரது தந்தை பார்சி இனத்தவரான அப்துல் அசன் அசாஃப் கான் ஜகாங்கீர் மன்னரின் மனைவியான நூர் ஜகானின் சகோதரர் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் மும்தாசு மகால் Mumtaz Mahal, பேரரசி ...

மும்தாஜ் தனது 19வது வயதில் 1612, மே 10 இல் குர்ராம் என்ற இளவரசனைத் திருமணம் செய்தார். குர்ராம் பின்னர் முகாலாயப் பேரரசின் மன்னனாகி ஷா ஜகான் என்ற பெயரைப் பெற்றார். மும்தாஜ் சாஜகானின் மூன்றாவது மனைவியானாலும் அவருக்கு மிகவும் விருப்பமுடைய மனைவியாயிருந்தார். இவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பர்ஹான்பூரில் தனது 14வது மகப்பேறின் போது மரணமானார்.[2] இவரது நினைவாக சாஜகானால் கட்டப்பட்ட தாஜ்மகால் நினைவு மண்டபத்தில் மும்தாசின் உடல் இறுதியாக அடக்கம் செய்யப்பட்டது.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads