மெகாரா

கிரேக்க நகரம் From Wikipedia, the free encyclopedia

மெகாரா
Remove ads

மெகாரா (Megara (/ˈmɛɡərə/; கிரேக்க மொழி: Μέγαρα, வார்ப்புரு:IPA-el) என்பது கிரேக்கத்தின் மேற்கு அட்டிகாவில் உள்ள ஒரு வரலாற்று நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது சலாமிஸ் தீவுக்கு எதிரே கொரிந்தின் பூசந்தியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஏதென்சால் கைப்பற்றப்படுவதற்கு முந்தைய, பழங்காலத்தில் மெகாரா நகர அரசை சேர்ந்ததாக இருந்தது. மெகாரா தற்போதைய கிரேக்கத்தின் பிராந்தியமான அட்டிகாவின் நான்கு மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. இரண்டாம் பாண்டியன் மன்னருக்கு பாரம்பரியமாக நான்கு மகன்கள் இருந்தனர். அவர்களில் நிசோஸ் மெகாராவின் ஆட்சியாளராக இருந்தார். மெகாரா ஒரு வர்த்தக துறைமுகமாகவும் இருந்தது. இதன் மக்கள் தங்கள் கப்பல்களைப் பயன்படுத்தி பொருள் ஈட்டினர். மெகாரா கம்பளி, குதிரைகள் போன்ற கால்நடைகள் உட்பட பிற விலங்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் நிபுணத்துவம் பெற்றது. இது இரண்டு துறைமுகங்களைக் கொண்டிருந்தது. அவை கொரிந்தியன் வளைகுடாவில் மேற்கில் பாகே மற்றும் ஏஜியன் கடலின் சரோனிக் வளைகுடாவில் கிழக்கே நிசாயா ஆகியவை ஆகும். [2]

விரைவான உண்மைகள் மெகாரா Μέγαρα, அரசாண்மை ...
Remove ads

வரலாறு

கொரிந்தியாவுக்கு சற்று வடமேற்கே மெகாரா அமைந்துள்ளது. ஸ்பாட்டா, ஏதன்ஸ் ஆகிய நகர அரசுகளுக்கு இடையில் அடிக்கடி ஏற்பட்டுவந்த மோதல்களில் இது அகப்பட்டு தவித்தது. கி.மு. ஏழாம், ஆறாம் நூற்றாண்டுகளில் மெகாரா உன்னதமான நிலையில் இருந்ததாக அறியப்படுகிறது. மெகாராவின் இரண்டு பக்கமும் கடல் இருந்த காரணத்தால் சுங்கவரியினால் மிகுந்த வருவாய் ஈட்டியது. வடக்கே பைசாந்தியம், மேற்கே கிசிலி போன்ற இடங்களில் பல வணிக மையங்களை ஏற்படுத்தி அதன் வழியாக தன் செல்வ நிலையை உயர்த்திக் கொண்டது.[3]

நாட்டில் செல்வம் பெருகினாலும், அது ஒரு சிலரிடமே தேங்கியது. இதனால் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் பெருகியது. ஏழைகள் தியாஜெனீஸ் என்பவரின் தலைமையில் கி.மு. 630 இல் புரட்சியில் ஈடுபட்டு வெற்றிபெற்றனர். இதன்முடிவில் நாட்டின் ஆட்சியாளராக தியாஜெனீஸ் பொறுப்பேற்றார். அவர் ஒரு தலைமுறை வரை நாட்டை ஆண்டர். இவருக்குப் பிறகு சிலமுறை ஏழை பணக்காரர்களுக்கு இடையிலான கலகங்கள் ஏற்பட்டன.[3]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads