மெகாராவின் தியாஜெனீஸ்
பண்டைய கிரேக்க ஆட்சியாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெகாராவின் தியாஜெனீஸ் (Theagenes of Megara, பண்டைக் கிரேக்கம்: Θεαγένης ὁ Μεγαρεύς) என்பவர் கிமு ஏழாம் நூற்றாண்டில் பண்டைய கிரேக்க நகரமான மெகாராவை ஆட்சி செய்த ஆட்சியாளர் ஆவார். இவரது வாழ்க்கை குறித்த ஒரே ஆதாரமாக, இவர் இறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுத்தாளர்களால் பதிவுசெய்யப்பட்ட நிகழ்வுகள் ஆகும். அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. இவரது வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டாலும், இவர் பழமையான துவக்ககால கிரேக்க சர்வாதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். [1]
Remove ads
வாழ்க்கை
மெகாராவின் தியாகனெஸ் தனக்கு ஒரு மெய்க்காப்பாளரைக் கொடுக்கும்படி மெகாரியர்களை வழிக்கு கொண்டுவந்ததாக அரிசுட்டாட்டில் கூறுகிறார். பின்னர் இவர் தன் மெய்க்காபாளர்களை நகரத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர பயன்படுத்தினார். [2] மற்றொரு இடத்தில் அரிஸ்டாட்டில், பணக்காரர்களை கூட்டமாக ஆற்றில் கொன்று தியாகன்ஸ் ஆட்சிக்கு வந்ததாக கூறுகிறார். [3] இந்தக் கதைகளி நம்பகமானவையானது தெளிவாகத் தெரியவில்லை. பணக்கார பிரபுத்துவத்திற்கும் அடிநிலையில் உள்ள ஏழை மக்களுக்கும் இடையேயான வர்க மோதலில் தலையிட்டு ஒரு கொடுங்கோலன் அதிகாரம் பெறுவதற்கான ஒரு எடுத்துக்காட்டாக அரிஸ்டாட்டில் இந்த நிகழ்வை முன்வைக்கிறார். [4]
தியாஜெனீஸ் தன் மகளை ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றவரான ஏதென்சின் சைலோனுக்கு மணமுடித்ததாக துசிடிடீஸ் கூறுகிறார். டெல்ஃபிக் ஆரக்கிளைக் கலந்தாலோசித்த சிலோன், கிமு 630 இல் ஒலிம்பிக் போட்டிகளின் போது, தியாஜெனீஸ் வழங்கிய படையுடன் அக்ரோபோலிசைக் கைப்பற்றுவதன் மூலம் ஏதென்சை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவு செய்தார். அந்த முயற்சி தோல்வியடைந்தது; சிலோனும் அவருடைய ஆதரவாளர்களும் முற்றுகையிடப்பட்டு கொல்லப்பட்டனர். [5] இதன் பின்னர் தியாஜெனீஸ் மற்றும் மெகாராவுக்கு என்ன விளைவுகள் ஏற்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை. சில அறிஞர்கள் இந்த நடவடிக்கையின் தோல்வியை தியாஜெனீஸ் அதிகாரத்தின் வீழ்ச்சியுடன் இணைக்கின்றனர். [4] தியாஜெனீஸ் தூக்கியெறியப்பட்டு நாடுகடத்தப்பட்டார் என்று புளூட்டாக் கூறுகிறார். ஆனால் இது எப்படி நடந்தது என்று அவர் கூறவில்லை. இவர் வெளியேற்றப்பட்ட பிறகு, மெகாரா ஒரு சிலவர் ஆட்சிக் குழுவால் ஆளப்பட்டது. [6]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads