மெசஞ்சர் (விண்கலம்)

From Wikipedia, the free encyclopedia

மெசஞ்சர் (விண்கலம்)
Remove ads

மெசஞ்சர் (MErcury Surface, Space ENvironment, GEochemistry and Ranging, MESSENGER) என்பது புதன் கோளின் வேதியியல் கட்டமைப்பு, நிலவியல் அமைப்பு, மற்றும் காந்தப்புலம் போன்றவற்றை அறிவதற்காக ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்தினால் 2004 ஆகத்து மாதத்தில் ஏவப்பட்ட ஒரு அமெரிக்கத் தானியங்கி விண்கலம் ஆகும்.[2] இது 485-கிகி (1067 இறாத்தல்) எடை கொண்டது. 1975 ஆண்டில் புதனை நோக்கி அனுப்பப்பட்ட மரைனர் 10 விண்கலத்துக்கு அடுத்தபடியாக அனுப்பப்பட்ட இரண்டாவது விண்கலம் ஆகும்.[3] இதுவே புதனின் சுற்றுப்பாதைக்குச் சென்ற முதலாவது விண்கலமும் ஆகும்.[2]

விரைவான உண்மைகள் இயக்குபவர், முதன்மை ஒப்பந்தக்காரர் ...

மெசஞ்சர் விண்கலம் பூமியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகியுள்ளது. இதன்போது இதில் பொருத்தப்பட்ட உபகரணங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டன. 2011, மார்ச் 18 ஆம் நாள் மெசெஞ்சர் வெற்றிகரமாக புதனின் சுற்றுப்பாதைக்குள் சென்றது. 2011 மார்ச் 24 இல் இதன் ஆய்வு உபகரணங்கள் மீள இயக்க வைக்கப்பட்டு, புதனின் சுற்றுப்பாதியில் இருந்தான தனது முதலாவது படத்தை 2011 மார்ச் 29 இல் அனுப்பி வைத்தது. மெசஞ்சர் தனது முதன்மையான திட்டப்பணியை 2012 இல் முடித்தது.[4]

இரண்டு மேலதிக திட்டங்களுடன், மெசஞ்சரின் திட்டம் 2015 ஏப்ரல் 30 இல் நிறைவடைந்தது.[5][6][7] மெசஞ்சர் தனது கடைசி சார்பியக்க உந்துபொருளைப் பயன்படுத்தியதை அடுத்து, அது சுற்றுப்பாதைச் சிதைவை அடைந்து, இறுதியில் புதனில் மோதிக் கொண்டது.[8][9]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads