புதன் (கோள்)

ஞாயிற்றுக் குடும்பத்தில் மிகச்சிறிய மற்றும் ஞாயிறுக்கு மிகவும் அருகிலுள்ள கோள் From Wikipedia, the free encyclopedia

புதன் (கோள்)
Remove ads

புதன் கோள் (Mercury) சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. புவியிலிருந்து காணும்போது இது 116 நாட்கள் எடுத்துக் கொள்வதைப் போலத் தோன்றும். இதற்கு இயற்கை நிலவுகள் எதுவும் அறியப்படவில்லை. [a] இந்தக் கோளுக்கு மேற்கத்தியப் பண்பாட்டில் உரோமை தூதுக் கடவுளான மெர்க்குரியின் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டில் அறிவுக்கு காரணமாகும் புதன் என்ற கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் சுற்றுப்பாதையின் சிறப்பியல்பு, சூரிய சேய்மை நிலை ...

சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை (angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3oதான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர். காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.

புதனில் சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் மற்றெந்தக் கோள்களையும் விட புதனின் கோள்பரப்பு பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது; கோள்நடுக்கோடு அருகே பகல் நேரத்தில் 700 K (427 °C; 800 °F) ஆகவும் இரவுநேரத்தில் 100 K (−173 °C; −280 °F) ஆகவும் உள்ளது. முனையங்களில் (துருவங்களில்) எப்போதுமே குளிர்ச்சியாக 180 K (−93 °C; −136 °F) கீழுள்ளது. புதனின் அச்சு சூரியக் குடும்பத்திலேயே மிகக் குறைந்த சாய்வைக் (ஏறத்தாழ 130 பாகை) கொண்டுள்ளது. ஆனால் இதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் மிகக் கூடியதாக உள்ளது. [b] பெரும்பாலான மற்றக் கோள்களைப் போல இங்கு பருவங்கள் ஏற்படுவதில்லை. புதன் ஞாயிற்று அண்மைநிலையில் சூரியனிடமிருந்து இருக்கும் தொலைவை விட ஞாயிற்றுச் சேய்மைநிலையில் 1.5 மடங்குத் தொலைவில் உள்ளது.

புதன் சூரியக் குடும்பத்திலேயே மிகவும் தனித்துவமான முறையில் சூரிய ஈர்ப்பில் பிணைந்து சுற்றுகின்றது. நிலைத்த விண்மீன்களிலிருந்து காணும்நிலையில் தனது சுற்றுப்பாதையில் இரண்டு சுற்றுக்கள் வரும் காலத்தில் தன்னைச் சுற்றி மூன்று முறை சுற்றிக் கொள்கின்றது.[10] சுற்றுப்பாதையில் சுழலும் குறியீட்டச்சு கொண்டுள்ள சூரியனிலிருந்து காணும்போது, இரண்டு புதனாண்டுகளுக்கு ஒருமுறை தன்னைச் சுற்றிக் கொள்கின்றது. புதனில் இருக்கும் கூர்நோக்கருக்கு ஒருநாள் இரண்டு ஆண்டுகளாகும்.

தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக் (craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது. ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு.

புதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில் முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974–1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30% படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion) புதனின் துணைக்கோளாக மாறியது.

Remove ads

உட்கட்டமைப்பு

Thumb
புவிநிகர் கோள்கள்: புதன், வெள்ளி, புவி, செவ்வாய்
Thumb
புதனின் உட்கட்டமைப்பு:
1. மேலோடு: 100–300 கி.மீ. தடிப்பு
2. மூடகம்: 600 கி.மீ. தடிப்பு
3. உட்புறம்: 1,800 கி.மீ. ஆரை

புதன் கோள் சூரியக் குடும்பத்தின் நான்கு புவிநிகர் கோள்களில் ஒன்றாகும். புவியைப் போன்றே பாறைகளால் ஆனது. சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய கோள் இது வாகும். இதன் நிலநடுக் கோட்டின் ஆரம் 2,439.7 கி.மீ.[11] புதனில் அண்ணளவாக 70% உலோகமும், 30% சிலிக்கேட்டுப் பொருளும் காணப்படுகிறது.[12] சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய அடர்த்தியான கோளான இதன் அடர்த்தி 5.427 கி/செமீ3. இது புவியின் அடர்த்தியான 5.515 கி/செமீ3.[11] ஐ விட சிறிது குறைவாகும்.

Remove ads

காந்தப் புலமும் காந்தமண்டலமும்

Thumb
புதனின் காந்தப் புலத்தின் சார்புவலிமையைக் காட்டும் படிமம்.

சிறிய அளவினதாக இருந்தாலும் மெதுவான 59-நாள்-தன்சுற்றுகையைக் கொண்டிருந்தாலும் புதனில் குறிப்பிடத்தக்க, பரப்பெங்குமான, காந்தப் புலம் நிலவுகின்றது. மாரினர் 10 எடுத்த அளவைகளின்படி புதனின் காந்தப்புலம் புவியினுடையதை விட 1.1% வலிமையுள்ளதாக இருக்கிறது. புதனின் கோள்நடுக்கோட்டில் உள்ள காந்தப் புலத்தின் வலிமை 300 நானோடெஸ்லா (nT]) ஆகும்.[13][14] புவியைப் போலவே, புதனின் காந்தப் புலமும் இருமுனையி.[15] ஆனால் புவியைப் போலன்றி புதனின் காந்த முனையங்கள் கோளின் சுழல் அச்சுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளன.[16] மாரினர் 10 மற்றும் மெசஞ்சர் விண்துருவிகளிலிருந்து பெறப்பட்ட அளவைகளிலிருந்து இந்தக் காந்தப் புலத்தின் வலிமையும் வடிவமும் நிலையாக உள்ளன.[16]

புவியைப் போன்றே இங்குள்ள காந்தப் புலமும் மின்னாக்கி விளைவால் உருவாகியுள்ளது.[17][18] இந்த மின்னாக்கி விளைவு கோளின் இரும்புமிக்க நீர்ம கருவகத்தின் சுற்றோட்டத்தால் ஏற்படுகின்றது. கோளின் மிகுந்த சுற்றுப்பாதை விலகலின் காரணமாக ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கருவகத்தை நீர்மநிலையில் வைத்திருக்க உதவுகின்றது.[19]

புதனின் வலிதான காந்தப்புலம் சூரியக்காற்றை கோளைச் சுற்றி திசைவிலகிச் செல்ல வைக்கின்றது. இதனால் கோளைச் சுற்றிலும் காந்தமண்டலம் ஒன்று உருவாகியுள்ளது. இது சிறிய அளவினதாக இருந்தாலும் சூரியக் காற்றை பிடிக்க போதுமானதாக உள்ளது. இது கோளின் மேற்பரப்பு விண்வெளியால் தேய்தலுக்கு வழிவகுக்கின்றது.[16]மாரினர் 10 எடுத்த கூர்நோக்குகளின்படி கோளின் இரவுப் பகுதியில் உள்ள காந்த மண்டலத்தில் குறைந்த ஆற்றல் பிளாசுமா கண்டறியப்பட்டுள்ளது. கோளின் காந்த வால்பகுதியில் ஆற்றலுள்ள துகள்களின் திரள்கள் கண்டறியப்பட்டுள்ளன; இது கோளின் காந்த மண்டல செயற்பாட்டுத் திறனை சுட்டுகின்றது.[15]

அக்டோபர் 6, 2008இல் தனது இரண்டாவது முறை பறப்பின்போது மெசஞ்சர் புதனின் காந்தப் புலம் மிகவும் "கசிவுடையதாக" கண்டது.[20]

Remove ads

புவியில் இருந்து

புவியில் இருந்து புதனை பார்க்கும் போது அது அதிக நீட்சியின் பகுதியில் இருக்கும் போது பார்த்தால் தெளிவாகத் தெரிய வாய்ப்புண்டு. மேற்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு மேற்கில் இருக்கும் போது சூரிய உதய்த்துக்கு முன்னரும், கிழக்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு கிழக்கில் இருக்கும் போது சூரிய அஸ்தமனத்துக்கு பின்னரும் மட்டுமே புவியில் இருந்து இதன் அதிக பகுதிகளை (அரைப் பகுதியிலேயே சூரிய ஒளிப்படும். புவியில் இருந்து பார்க்கும் போது ஒளிப்படும் பகுதியிலும் பாதியையே பார்க்க முடியும்.) நோக்க முடியும் என்பது இயற்பியல் வழக்கு. ஆனால் இந்த இயற்பியல் வழக்கின் படிப் பார்த்தாலும் புதனின் அதிகப் பகுதிகளை தெளிவாகப் பார்க்க முடியாது. அதன் காரணம் புதனின் தோற்ற ஒளிர்மையே ஆகும். அதனால் புதனின் குவிகோடுகள் வளைந்த நிலையில் இருக்கும் போதே புதனை எளிதாக பார்க்க முடியும். அதாவது கிழக்கதிக நீட்சிக்கு சில நாட்கள் முன்னரும், மேற்கதிக நீட்சிக்கு சில நாட்கள் பின்னருமே இதை தெளிவாக மானிடர்களின் வெற்றுக் கண்களால் நோக்க முடியும்.

புதனில் மானிடக் குடியேற்றத்தின் சாத்தியங்கள்

நிலவை ஒத்த புதன்

Thumb
மானிடர் புதனில் ஒருவேளைக் குடியேறினால் இப்படத்தில் ஒளிபடும் இடங்களின் விளிம்புகளை ஒட்டியே நகர்ந்து கொண்டிருப்பது போல் நகரங்களை உருவாக்க வேண்டும்

மானிடர் குடியேற்றம் என்ற நோக்கில் பார்க்கும் போது நிலவில் மானிடர் குடியேறுவதற்கு தேவைப்படும் விடயங்களே இங்கும் தேவைப்படுகின்றன. மேலதிகமாக சூரியனின் வெப்பத்தில் இருந்து தப்புவதற்கான வெப்பக் கேடயங்களும் தேவைப்படும். இதற்கான கண்க்கிடப்பட்ட நகரும் குடியேற்றத்தையும் உருவாக்க வேண்டும். (வலது பக்கம் இருக்கும் படத்தைப் பார்க்க)

இங்கு இருக்கும் சூரிய எரிசக்தி மிகவும் அதிகம் என்பதால் மின்சாரத்தை எளிதாக பெற முடியும். புவியில் சூரிய மின்தடுகளை வைத்து பெரும் மின்சாரத்தை விட இங்கு ஆறரை மடங்கு அதிகமாக மின்சாரத்தைப் பெற முடியும் என்பது இதன் அனுகூலமாகும்.

நீராதாரம்

புதன் கிரகத்தில் நீர் பனிக்கட்டியாக அதன் துருவங்களில் உள்ளது. இவை பல கோடி ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களாக இருந்ததால் இன்றும் ஆவியாகாமல் உள்ளது. புதன் கிரகத்தின் வட துருவத்தில் உள்ள ஆழமான பள்ளங்களில் காணப்படுகின்ற ஏராளமான அளவிலான பனிக்கட்டிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நட்சத்திரங்களால் வந்து விழுந்த "பனிக்கட்டி உருண்டைகள்" என்று கருதப்படுகிறது.

தடைகள்

இதில் மானிடர் குடியேற்றம் நடக்க அதிக நுட்பங்களை உருவாக்குதல், இதற்கான வெப்பக் கேடயங்களை தயாரிக்கும் முறையை கண்டறிந்து உருவாக்குதல், இக்கோளில் இருந்து வேறு கோளுக்கு செல்ல மிக அழுத்தமும் வேகமும் தரக்கூடிய விண்கலன்களை உருவாக்குதல் போன்றவை புதனில் மானிடர் குடியேறுவதற்கு பெரும் தடைகளாய் உள்ளன.

Remove ads

குறிப்புகள்

  1. சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள கோள்களான புதனும் வெள்ளியும் மட்டுமே சூரியக் குடும்பத்தில் இயற்கை நிலவுகள் இல்லாத கோள்களாகும். ஏதேனும் இயற்கை நிலவு ஏற்படினும் சூரியனின் ஈர்ப்புவிசை அதன் சுற்றுப்பாதையில் குறுக்கிட்டு அதை கோளின் பரப்பில் விழச் செய்துவிடும். ஆனால் இந்தக் கோள்களுக்கு செயற்கை நிலவுகள் ஏவப்பட்டுள்ளன; இவற்றின் சுற்றுப்பாதையை அவ்வப்போது ஏவூர்திகள் மூலம் சரி செய்ய வேண்டும். ஏவூர்திகளில் உள்ள எரிசக்தி தீர்ந்தபின்னர் இந்த செய்மதிகள் நீண்டநாட்கள் நிலைத்திருக்காது கோளின் பரப்பில் வீழ்ந்துவிடும்.
  2. புளூட்டோ was considered a கோள் from its discovery in 1930 to 2006, but after that it has been classified as a குறுங்கோள். Pluto's orbital eccentricity is greater than that of Mercury. Pluto is also smaller than Mercury, but was assumed to be larger until 1976.
  3. Some sources precede the cuneiform transcription with "MUL". "MUL" is a cuneiform sign that was used in the Sumerian language to designate a star or planet, but it is not considered part of the actual name. The "4" is a reference number in the Sumero-Akkadian transliteration system to designate which of several syllables a certain cuneiform sign is most likely designating.
  4. In astronomy, the words "rotation" and "revolution" have different meanings. "Rotation" is the turning of a body about an axis that passes through the body, as in "Earth rotates once a day.". "Revolution" is motion around a centre that is external to the body, usually in orbit, as in "Earth takes a year for each revolution around the Sun.". The verbs "rotate" and "revolve" mean doing rotation and revolution, respectively.
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads