மெசியா நம்பிக்கை யூதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெசியா நம்பிக்கை யூதம் (ஆங்கிலம்: Messianic Judaism, மெசியானிக் யூடயிசம்) என்பது ஒரு 1960 மற்றம் 1950களில் உருவாகிய சமய இணைப்பு[1] இயக்கமாகும்.[9] இது நற்செய்தி அறிவிப்பு கிறிஸ்தவ இறையியலுடன் யூத நடைமுறை மற்றும் சொல்லியல் மூலங்களை ஒன்றிணைக்கிறது.[14] மெசியா நம்பிக்கை யூதமானது இயேசு யூதரின் மெசியா மற்றும் மகனாகிய கடவுள் (திரித்துவம்) ஆகிய இரண்டையும் கருத்துக்களையும் பொதுவாகக் கொண்டுள்ளது.[18] ஆயினும், சிலர் திரித்துவம் பற்றிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்வதில்லை.[19] சில மறுப்புக்களுடன், எபிரேய வேதாகமம் மற்றும் புதிய ஏற்பாடு என்பன அதிகாரபூர்வமானதும் தெய்வத்தன்மையான தூண்டுதலுக்குள்ளான வேதப்புத்தகம் என நம்பப்படுகின்றது.
இயேசுவை ஒரே கடவுளின் மீட்பராக ஏற்றுக் கொள்வதனூடாக மீட்பினை அடைய முடியும் என்று அநேக மெசியா நம்பிக்கை யூதம் அமைப்புகள் கருதுகின்றன.[20] இது இயேசுவின் மரணம், உயிர்ப்பு ஊடாக சகல பாவங்களுக்கான பரிகாரம் கிடைத்துவிட்டது என நம்புகின்றது. யூத சட்டம் அல்லது நடத்தைப் பழக்கங்களிளைப் பின்பற்றுவது கலாச்சார விடயமே, அதனூடாக மீட்பினை அடைய முடியாது[10] மெசியத்துவத்திலும் இயேசுவின் தெய்வீகத்திலும் நம்பிக்கை என்ற மெசியா நம்பிக்கை யூதத்தின் பொதுக் கருத்தானது பல கிறிஸ்தவ பிரிவுகளினதும் கருத்தாகவும்[21] யூதச் சமய இயக்கங்களினால் கிறிஸ்தவத்திற்கும் யூதத்திற்கும் இடையேயான வேற்றுமையாகவும் பார்க்கப்படுகின்றது.[22][28] பிரதான கிறிஸ்தவ குழுக்கள் மெசியா நம்பிக்கை யூதத்தை கிறிஸ்தவத்தின் ஒரு வடிவமாகவே ஏற்றுக் கொள்கின்றன.[21]
மெசியா நம்பிக்கை யூதத்தைக் கடைப்பிடிப்பவர்களில் சிலர் இன அடிப்படையில் யூதர்கள்.[2][21] பலர் இது யூதத்தின் ஒரு பகுதி என வாதிடுகின்றனர்[29] யூத அமைப்புக்களும் இசுரேலிய உயர் நீதிமன்றமும் இதனை மறுத்து, கிறிஸதவத்தின் ஓர் வடிவமாகவே கருதுகின்றது.[22][30] 2003 முதல் 2007 வரை, அமெரிக்காவில் 150 மெசியா நம்பிக்கை யூத வழிபாட்டு இல்லங்கள் பெருகி 438 ஆகவும், இசுரேலில் 100 அதிகமாகவும், உலகளவில் பலவாகவும் இவ்வமைப்பு பெருகியுள்ளது. பெரிய மெசியா நம்பிக்கை யூத அமைப்புக்களுடன் சிறியளவு அமைப்புகள் சேர்ந்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்டோ காணப்படுகின்றன.[31][32] இவ்வமைப்பு 6,000க்கும் 15,000க்கும் இடைப்பட்ட அங்கத்தவர்களை இசுரேலிலும்[33] 250,000 அங்கத்தவர்களை அமெரிக்காவிலும் கொண்டுள்ளதாக 2008இல் அறிக்கை வெளியிட்டது.[34]
Remove ads
வரலாறு
19ம் நூற்றாண்டுக்கு முன்
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads