மெய்க் காட்டிட்ட படலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெய்க் காட்டிட்ட படலம் என்பது சைவ சமய நூலான திருவிளையாடல் புராணத்தில் வரும் 30ஆம் படலம் ஆகும், இது கூடல் காண்டத்தில் இடம் பெற்றுள்ளது இதில் 1664 முதல் 1704 வரை பாடல்கள் இடம்பெற்றுள்ளன [1]
![]() | இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். (மே 2025 நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள், எவரும் இதன் குறிப்பிடத்தகுநிலையினை நிறுவாத நிலையில், இக்கட்டுரைப் பக்கம் அழிக்கப்படும்) |
Remove ads
கதை
சேதிராயர் என்ற குறுநில மன்னன் பாண்டிய நாட்டோடு சேர்த்து பல நாடுகளை கைப்பற்றும் எண்ணம் கொண்டிருந்தான், இச்செய்தியை தன் ஒற்றர்கள் மூலம் அறிந்துக் கொண்ட குலபூஷண பாண்டியன் தன் படைத்தலைவன் சௌந்தர சாமந்தனிடம் இச்செய்தியை கூறி பெரும்படையை திரட்டும்படியும் அதற்கு ஆகும் செலவை கருவூலத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்படியும் கூறினான் [2]
சௌந்தர சாமந்தன் இறைப்பணி செய்தல்
படைத் திரட்ட பெற்ற பெரும் பொருளை அதற்கு செலவிட மனமில்லாது சிவனடியார்களுக்கு உதவுதல் கோவில் திருப்பணிகள் செய்தல் ஆகியவற்றிக்கு செலவிட்டார் [2]
மன்னன் படையைக் காண கேட்டலும் படைகளின் வருகையும்
ஒரு நாள், செளந்தர சாமந்தன் திரட்டிய படைகளை காண விரும்பிய மன்னன் நாளை, திரட்டிய படைகளை அணிவகுக்கும்படி கூறி சென்றார் இது பற்றி சொக்கநாதரிடம் முறையிட்டான் சாமந்தன், கவலை வேண்டாம் நாளை நாம் படைத் திரட்டி வருகிறோம் என்று அசரிரீயாக கூறி அருளினார் இறைவன், மறுநாள் படையைக் காண மன்னனை வரச் சொல்லி விட்டு திடலுக்கு வந்திருந்தான் சௌந்தர சாமந்தன், இதை காண பொதுமக்களும் வந்திருந்தனர், பிறகு மன்னன் கூறியதும் செக்கநாதரை தியானித்தான் உடனே மதுரை நகர் குலுங்கும்படி பேரொலியுடன் படைகள் அணிவகுத்தன கலிங்கம் வங்கம் போன்ற பல்வேறு நாடுகளின் வீரர்களும் படைகளும் வந்திருந்தன நடுவில் இறைவன் குதிரையில் வந்தபடி படைகளை வழிநடத்தி வந்தார், இதைக் கண்ட மன்னன் சாமந்தனுக்கும் இறைவனுக்கும் பெரும் பொருள் தந்து மகிழ்ந்தார் இதற்கிடையில் காட்டிக்கு வேட்டைக்கு சென்ற சேதிராயர் புலித் தாக்கி இறந்த செய்தியை ஒற்றர் மூலம் அறிந்தார், எனவே படையை வழிநடத்தி வந்த இறைவனிடம் படைகளின் தேவை தற்போது இல்லை என்றும் பின்னர் அழைப்பதாகவும் கூறி பாசறைக்கு திரும்பும்படி கூறினார், மன்னன் கூறிய உடனே படைகள் மறைந்தன இதைக் கண்டு வியந்த மன்னனிடம் நடந்தவற்றை கூறினான் சாமந்தன், இதனால் மகிழ்ந்த மன்னன் சாமந்தனனுக்கு இறைப்பணி செய்ய பெரும் பொருள் தந்து மகிழ்ந்தான் [2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads