மெஹந்தி சர்க்கஸ்
2019இல் வெளியான தமிழ் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெஹந்தி சர்க்கஸ் (Mehandi Circus)[1] என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் - மொழி அதிரடி காதல் நாடகத் திரைப்படமாகும். ராஜு முருகன் எழுதிய இதனை இவருடைய மூத்த சகோதரரான சரவண ராஜேந்திரன் இயக்கியிருந்தார்.[2][3] இந்தப் படத்தில் புதுமுகம் மாதம்பட்டி ரங்கராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும், சுவேதா திரிபாதி தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகியாகவும்,[4][5] விக்னேஷ்காந்த், வேல ராமமூர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார், செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவாளராகவும், மாநகரம் படப் புகழ் பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றினர். இந்த படத்தை கே. இ. ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார். இந்த படம் விமர்சகர்களிடையேயும், பொதுப் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
Remove ads
நடிப்பு
- ஜீவாவாக மாதம்பட்டி ரங்கராஜ்
- மெஹந்தியாக சுவேதா திரிபாதி
- பாதிரியார் அமலதாஸாக வேல ராமமூர்த்தி
- ஜீவாவின் நண்பராக விக்னேஷ்காந்த்
- ராஜாங்கமாக ஜி. மாரிமுத்து
- ஜாதவ்வாக அங்கூர் விகால்
- மெஹந்தியின் தந்தையாக சன்னி சார்லஸ்[6]
- மெஹந்தி மற்றும் ஜாதவ்வின் மகளாக பூஜா தம்பே
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads