வேல ராமமூர்த்தி
தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேல ராமமூர்த்தி (Vela Ramamoorthy) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் மற்றும் நடிகராவார். தமிழ் மொழியில் எடுக்கப்படும் திரைப்படங்களில் அவ்வப்போது தோன்றி நடித்துவருகிறார்.
தொழில்
புதுமுக வகுப்பு வரை கல்வி பயின்ற வேல ராமமூர்த்தி இந்திய இராணுவத்தில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் இவர் அஞ்சல் நிலையத்தில் பணிபுரிய அனுப்பப்பட்டார். ராமமூர்த்தி ஓர் எழுத்தாளர் என்பதால் இவரைச் சந்திக்க அஞ்சல் அலுவலகத்திற்கு பலர் வந்து செல்வார்கள். நான் என் சம்பளத்தில் பாதியை தேநீர் கடைகளில் செலவிடுகிறேன் என்று புதிய தலைமுறை தமிழ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் வேல ராமமூர்த்தி நினைவு கூர்ந்த நிகழ்விலிருந்து அன்னாரின் நட்பு வட்டாரத்தை உணர முடியும். குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட புகழ்பெற்ற தமிழ் நாவல்களை இவர் எழுதியுள்ளார். மேலும் சமகாலத்தின் முன்னணி தமிழ் கதை எழுத்தாளர்களில் ஒருவராகவும் வேல ராமமூர்த்தி கருதப்படுகிறார்.[1] பாரதிராஜா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கிடையே குற்ற பரம்பரை கதையை திரைப்படமாக்குவது தொடர்பான வழக்கில் தொடர்புடையவர் ஆகிறார். குற்றப்பரம்பரை வரலாற்றின் காலகட்டத்தை திரையில் கொண்டுவரும் பெரிய சவாலை பாலாவுக்காக திரைக்கதையாக இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.[2] வேலராமமூர்த்தி எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வேல ராமமூர்த்தி கதைகள் என வெளியிடப்பட்டுள்ளது.
சேதுபதி, கிடாரி போன்ற திரைப்படங்களில் நடித்து எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எதிர்மறை வேடங்களிலும் சிறந்தவராக ஈர்க்கப்பட்டார்.[3] கொம்பன், ரஜினி முருகன் , அப்பா, எய்தவன், வனமகன், தொண்டன் மற்றும் அறம் போன்ற பிரபலமான திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். ஸ்கெட்ச், என்னை நோக்கி பாயும் தோட்டா, என்.ஜி.கே போன்ற இவர் நடித்த திரைப்படங்களின் வரிசை சுவாரசியமான வரிசையாகும்.[4]
அண்ணாத்த என்ற ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்திலும் வேல ராமமூர்த்தி நடித்துள்ளார்.
Remove ads
திரைப்படங்களின் பட்டியல்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads