மேகேதாட்டு
அருவி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேகேதாட்டு (Mekedatu) கருநாடக மாநிலம் ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றின் ஒரு குறுகலான பகுதியை குறிப்பதாகும். இதை ஆடு தாண்டு காவிரி என்றும் அழைப்பர்.[1]


காவிரி ஆறும் ஆர்க்காவதி ஆறும் சங்கமம் என்னுமிடத்தில் இணைகின்றன. இதன் அருகே காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து தமிழகத்தை அடைகிறது. ஆடு கூட இங்கு காவிரியை தாண்டிவிடலாம் என்பதால் இவ்விடத்திற்கு கன்னடம் மொழியில் மேகேதாட்டு (Mekedatu) என்று பெயர் வழங்கலாயிற்று. மேகே - ஆடு , தாட்டு - தாண்டுதல் என பொருள்படும்.
Remove ads
அணை
மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இவ்விடத்தில் கர்நாடக அரசு, புனல் மின் நிலையம் அமைக்க, மேகேதாட்டு தடுப்பணைத் திட்டம் செயல்படுத்தி வருவதால், தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கும் என்பதால், தமிழ்நாடு அரசும் விவசாயிகளும் மேக தாது தடுப்பணைத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்.[2][3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads