ராமநகரம் மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராமநகரம் மாவட்டம் என்பது கர்நாடகாவில் பெங்களூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டம். இது 2007 ஆம் ஆண்டு, ஆகத்து 23 ஆம் நாள் பெங்களூர் நாட்டுப்புறம் பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டது.[1] இதன் தலைமையிடம் இராமநகரம் ஆகும். இது பெங்களூரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு பட்டு உற்பத்தியின் மூலம் பொருளாதாரம் சீர்நிலையை அடைகிறது. இங்கு கிரானைட் கற்களும் உள்ளன.
Remove ads
மாவட்ட நிர்வாகம்
இராமநகரம் மாவட்டம் 4 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[2]
- இராமநகரம் வட்டம்
- சென்னப்பட்டனம் வட்டம்
- கனகபுரா வட்டம்
- மகாடி வட்டம்
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள் தொகை 1,082,636 ஆகும். அதில் ஆண்கள் 548,008 மற்றும் 534,628 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 69.22% ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 88.60 %, இசுலாமியர் 10.56 %, கிறித்தவர்கள் 0.59 % மற்றும் பிறர் 0.26% ஆக உள்ளனர்[3]
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads