மேற்கு கடற்கரை விரைவுச்சாலை

தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரை வழியாகச் செல்லும் ஒரு விரைவுச்சாலை From Wikipedia, the free encyclopedia

Remove ads

மேற்கு கடற்கரை விரைவுச்சாலை E32  (ஆங்கிலம்: The West Coast Expressway (E32); மலாய்: Lebuhraya Pesisiran Pantai Barat) என்பது தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரை வழியாகச் செல்லும் ஒரு விரைவுச்சாலை ஆகும்.

விரைவான உண்மைகள் மேற்கு கரை விரைவுச்சாலைWest Coast Expressway Lebuhraya Pesisiran Pantai Barat, வழித்தடத் தகவல்கள் ...
Thumb
மேற்கு கடற்கரை விரைவுச்சாலை

233-கி.மீ. (145-மைல்) நீளம் கொண்ட இந்த விரைவுச்சாலை தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இருப்பினும் பல பகுதிகள் பொது பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டு உள்ளன. இந்த விரைவுச் சாலை கட்டி முடிந்தவுடன், பேராக் மாநிலத்தின் சங்காட் ஜெரிங்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் பந்திங் நகர்களைக் கடந்து செல்லும். [1]

Remove ads

பொது

இந்த நகரங்கள் ஏற்கனவே கூட்டரசு சாலை 5 (மலேசியா); கூட்டரசு சாலை 60 (மலேசியா); ஆகிய கூட்டரசு சாலைகளின் வழியில் உள்ள நகரங்களாகும். மேற்கு கடற்கரை விரைவுச்சாலை கட்டி முடிக்கப் பட்டதும், அந்தச் சாலை இந்தக் கூட்டரசு சாலைகளின் வழியாக அருகைமையில் தொடரும். அந்த வகையில் சங்காட் ஜெரிங்; பந்திங் நகரங்களையும் அந்தச் சாலை மிக அருகில் கடந்து செல்லும். [2]

இந்தக் கடற்கரை விரைவுச்சாலை 2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக நிறைவு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.[3]

Remove ads

வரலாறு

இந்த விரைவுச் சாலையைக் கட்டுவதற்கு மேற்கு கரை நெடுஞ்சாலை நிறுவனம் (ஆங்கிலம்: West Coast Expressway Sdn Bhd; மலாய்: Konsortium Lebuhraya Pantai Barat) எனும் கட்டுமான நிறுவனத்திற்கு 2013 டிசம்பர் 20-ஆம் தேதி மலேசிய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியது.

ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்தச் சாலை பற்பல நெருக்கடிகளினால் காலதாமதமானது. எனினும் 2024 அனைத்துக் கட்டுமானங்களும் முடிவுறும் என எதிர்பார்க்கப் படுகிறது.[4]

Remove ads

கூட்டரசு சாலை 28

இந்த மேற்கு கடற்கரை விரைவுச்சாலைக்கு முதலில் கூட்டரசு சாலை 28 என பெயர் வைக்கப்பட்டது. எனினும் மாற்றம் செய்யப்பட்டு கூட்டரசு சாலை 32 என்று புதிய பெயர் வைக்கப்பட்டது. பழைய பெயரான கூட்டரசு சாலை 28 எனும் பெயர் சுல்தான் அப்துல் அலீம் முவாசாம் ஷா பாலத்திற்கு (Sultan Abdul Halim Muadzam Shah Bridge) வழங்கப்பட்டது.

நீளமான சாலைகள்

இந்த விரைவுச்சாலையின் கட்டுமான வேலை நிறைவு அடைந்த பின்னர், இந்தச் சாலை தீபகற்ப மலேசியாவில் நான்காவது மிக நீளமான சாலையாக அமையும்.

மலேசியாவில் இதர மிக நீளமான சாலைகள்:

  • வடக்கு-தெற்கு விரைவுசாலை வடக்கு வழித்தடம் (மலேசியா) (North-South Expressway Northern Route)
  • கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (East Coast Expressway)
  • வடக்கு-தெற்கு விரைவுசாலை தெற்கு வழித்தடம் (மலேசியா) (North-South Expressway Southern Route)

கண்ணோட்டம்

மேற்கு கடற்கரை விரைவுச்சாலையின் கட்டுமானம் பதினொரு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதல் ஐந்து தொகுப்புகளுக்கான பணிகள் மே 2014-இல் தொடங்கப்பட்டன. அவற்றில் மூன்று தொகுப்புகள் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ளன. மற்ற இரண்டு தொகுப்புகள் பேராக் மாநிலத்தில் உள்ளன.

தஞ்சோங் காராங் முதல் ஊத்தான் மெலிந்தாங் வரையிலான பகுதிகளும்; தெலுக் இந்தான் முதல் கம்போங் லெக்கிர் வரையிலான பகுதிகளும்; தற்போதுள்ள மலேசியக் கூட்டரசு சாலை 5-ஐ பயன்படுத்துகின்றன.

Remove ads

கட்டுமானங்கள்

மேற்கு கடற்கரை விரைவுச்சாலையைக் கட்டுவதற்கு ஏறக்குறைய RM 4.6 பில்லியன் செலவாகும் என்றும்; கட்டுமானத்திற்கு மட்டும் RM 3.6 பில்லியன் செலவாகும் என்றும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.[5] [6]

2014 மே 25-ஆம் தேதி, விரைவுச்சாலையின் கட்டுமானம் தொடங்கியது. 2019 டிசம்பர் 10-ஆம் தேதி, 71% வேலைகள் முடிவடைந்தன. இருப்பினும் சில இயற்கைச் சிற்றிடர்களால் கட்டுமான வேலைகள் தாமதமாகின. 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்துக் கட்டுமானங்களும் முடிவுறும் என எதிர்பார்க்கப் படுகிறது.[7][8]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads