கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை
காராக் நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கோலா திராங்கானு வரை செல்கிறது From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (ஆங்கிலம்: East Coast Expressway; மலாய்: Lebuhraya Pantai Timur (LPT)
/
) என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலை ஆகும். இது காராக் நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கோலா திராங்கானு வரை செல்கிறது. இந்தச் சாலையின் நீளம் 433 கி.மீ.
தீபகற்ப மலேசியா, இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பிரிவு மேற்கு கடற்கரை தீபகற்ப மலேசியா. மற்றொரு பிரிவு கிழக்கு கடற்கரை தீபகற்ப மலேசியா.
இந்த கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை; தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையில் இருந்து தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரைக்கு ஒரு பிரதான வழியை வழங்குகிறது. மலாயா தீபகற்பத்தின் முதுகெலும்பாகச் செயல்படும் இந்த விரைவுச்சாலை, தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள பெரும்பாலான நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையாகவும் விளங்குகின்றது.
Remove ads
விளக்கம்
விரைவுச்சாலை (ஆங்கிலம்: Expressway; மலாய்: Lebuhraya).
மலேசிய விரைவுச்சாலை (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia).
நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Highway; மலாய்: Laluan).
மலேசியக் கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia).
பொது
இந்த நெடுஞ்சாலை மலாயா தீபகற்பத்தில் உள்ள சிலாங்கூர், பகாங் மற்றும் திராங்கானு எனும் மூன்று மாநிலங்களின் வழியாகச் செல்கிறது. பழைய கோலாலம்பூர் - குவாந்தான் சாலை FT2 () (Kuala Lumpur-Kuantan Road FT2) சாலைக்கும்; மற்றும்
செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலைக்கும் (Jerangau-Jabor Highway) விரைவான மாற்றுச் சாலையாகவும் அமைகிறது.
இதனால் கிழக்குக் கடற்கரை நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாகக் குறைகிறது. இந்த நெடுஞ்சாலை, எனும் ஆசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் ஒரு பகுதியாகவும் உள்ளது. நெடுஞ்சாலையில் வேக வரம்பு மணிக்கு 110 கி.மீ. (68 மைல்) ஆகும்.
Remove ads
பாதை பின்னணி
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையானது காராக் நெடுஞ்சாலையில் கிழக்கு முனையின் பகாங் காராக் நகரில் தொடங்கி, லாஞ்சாங், மெந்தகாப் வழியாகச் செல்கிறது.
தெமர்லோ, செனோர், மாரான், ஸ்ரீ ஜெயா, கம்பாங், குவாந்தான், ஜபூர், செனி, சுக்காய், கிஜால், கெர்த்தே, பாக்கா, டுங்குன், புக்கிட் பீசி, அஜில் மற்றும் டெலிமோங் ஆகிய நகரங்களைக் கடந்து திராங்கானு மாநிலத்தின் கோலா நெருஸ் நகருக்கு அருகே உள்ள கம்போங் கெமுருவில் முடிவு அடைகிறது.
தீபகற்ப மலேசியாவில், வடக்கு-தெற்கு விரைவுசாலைக்குப் பிறகு, இரண்டாவது மிக நீளமான விரைவுச் சாலை இதுவாகும்.
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads