மேற்கு காமெங் மாவட்டம்

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

மேற்கு காமெங் மாவட்டம்
Remove ads

மேற்கு காமெங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதன் தலைமையிடம் பொம்டிலா ஆகும்.

விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
Remove ads

பெயர்க் காரணம்

பிரம்மபுத்ரா நதியின் ஒரு கிளையான காமெங் ஆறு இங்கு பாய்வதால், இந்த மாவட்டத்திற்கு இந்த பெயர் வந்தது. முன்பு காமெங் மாவட்டம் என்ற பெயருடன் இருந்த இந்த மாவட்டமானது, அரசியல் காரணங்களுக்காக ஜூன் 1, 1980 ஆம் ஆண்டு கிழக்கு மற்றும் மேற்கு காமெங் என்று இரண்டாக பிரிக்கப்பட்டது.

அமைப்பு

சுமார் 7442 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டத்தின் எல்லையாக வடக்கே திபெத் நாடும், மேற்கே பூட்டான் நாடும், தெற்கே அசாம் மாநிலமும் உள்ளன. இமயமலையின் தொடர்கள் நிறைந்த இந்த மாவட்டம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5690 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த மாவட்டத்தின் உயர்ந்த மலைச்சிகரமாக கங்தே உள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் கீழே உள்ளது. திரிஜினோ, ரூப, போம்தில்லா, டிரங், கலக்டங், பலேமு, பழுக்போங், ஜமெரி, சின்சுங், நப்ரா, தெம்பங், ஷேர்காஒன். இந்த மாவட்டம் 4 சட்டசபை தொகுதியை கொண்டுள்ளது.

Remove ads

மக்கள்

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான மொன்பா, திறங், புட், லிஸ், கலக்டோங் மொன்பா, மிஜி, சேர்துக்பெண், அக, மற்றும் கோவா ஆகிய இவர்கள் மட்டுமே 78% சதவிகிதம் இருக்கின்றனர். மற்ற இனங்களான தக்ப, லிஷிபா, சுக்பா, புட்பா ஆகியவர்கள் சிறிய அளவில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் புத்த மதத்தை பின்பற்றினாலும், டோன்யி-போலோ, இந்து மதம் ஆகியவற்றை பின்பற்றுபவர்களும் இங்கு உள்ளனர்.

சுற்றுலாத் தளங்கள்

கழுகுக் கூடு சரணாலயம் மற்றும் செஸ்ஸா ஆர்சிட் சரணாலயம் ஆகிய இரண்டும் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads