மேற்கு திமோர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேற்கு திமோர் (West Timor) (Indonesian: Timor Barat) இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் சுந்தா சிறு தீவுகள் கூட்டத்தில் அமைந்த நூசா தென்கரா மாகாணத்தில் அமைந்த திமோர் தீவின் மேற்கு பகுதியாகும். திமோர் தீவின் கிழக்குப் பகுதியான கிழக்கு திமோர், இந்தோனேசியாவிலிருந்து தனியாக பிரிந்து தனிநாடானது. மேற்கு திமோரின் தலைநகரமான குபாங் துறைமுக நகரத்தின் மக்கள்தொகை 4,00,000 மேல் ஆகும். [1][2]. 1949 முதல் 1975 முடிய மேற்கு திமோரை இந்தோனேசியன் திமோர் எனப்பட்டது.[3][4]

கிழக்கு திமோருக்கு[5] சொந்தமான பாண்ட் மகாஸ்ஸார் மாவட்டம் இந்தோனேசியாவின் மேற்கு திமோரில் உள்ளது.
16,264 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு திமோர், கடல் மட்டட்திலிருந்து 2457 மீட்டர் உயரத்த்தில் முடீஸ் மலைச்சிகரம் மற்றும் 1600 மீட்டர் உயரத்தில் அமைந்த லக்கன் மலைச்சிகரம் உள்ளது.
மேற்கு திமோர் தீவின் முக்கிய மொழிகள் தவான் , மரே மற்றும் டெத்துன் ஆகும்.
கிழக்கு திமோர் தனி நாடு கோரி நடந்த கிளர்ச்சிகளில் பாதிக்கப்பட்டவர்கள் [6], 1998-2002 காலகட்டங்களில் மேற்கு திமோரை புகழிடமாக கொண்டனர்.
Remove ads
வரலாறு

கிபி 1520 முதல் இந்தோனேசியாவின் திமோர் உள்ளிட்ட தீவுகளில் நெதர்லாந்து நாட்டினர் வணிக நிறுவனங்களை நிறுவினர். 1640ல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியினர் திமோர் தீவில் இருந்த போர்த்துகேய வணிகர்களை வெளியேற்றி விட்டு தங்கள் மேலான்மையை நிலைநாட்டினர். கிபி 1799ல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலக்கப்பட்டது. எனவே திமோர் தீவின் நிர்வாகம் இடாச்சுப் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் சென்றது.
இறுதியாக மேற்கு திமோர் மற்றும் கிழக்கு திமோருக்கும் இருந்த எல்லைப்பிரச்சனை நெதர்லாந்து மற்றும் போர்த்துகல் நாடுகளுக்கு இடையே 1859 மற்றும் 1893 ஆண்டுகளில் ஏற்பட்ட உடன்படிக்கை மூலம், 1914ம் ஆண்டில் முடிவிற்கு வந்ததது. மேற்கு திமோர், டச்சு நாட்டு முகவரின் கட்டுப்பாட்டில் வந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது, 1942ம் ஆண்டின் துவக்கத்த்தில், ஜப்பான் படைகள் திமோர் தீவை கைப்பற்றியது. இந்தோனேசியாவின் விடுதலைக்குப் பின்னர் மேற்கு திமோர், நூசா தென்கரா மாகாணத்தில் ஒரு பகுதியாக விளங்குகிறது.

Remove ads
புவியியல்
இந்தோனேசியாவின் சுந்தா சிறு தீவுகள் கூட்டத்தில் அமைந்த திமோர் தீவில், 16264.78 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு திமோர், கிழக்கு திமோர் நாட்டின் மேற்கில் உள்ளது. கிழக்கு திமோருக்கு சொந்தமான பாண்ட் மகாஸ்ஸார் மாவட்டம் இந்தோனேசியாவின் மேற்கு திமோரில் உள்ளது.
சமயங்கள்
மேற்கு திமோர் மக்களில் 56% உரோமன் கத்தோலிக்க சமயத்தையும், 35% சீர்திருத்தத் திருச்சபையையும் மற்றும் 8% இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகின்றனர். .
Remove ads
பொருளாதாராம்
தீவுப் பகுதியான மேற்கு திமோரில் வேலை வாய்ப்பின்மை 2.39% ஆகவுள்ளது. .[7]2012 கணக்கெடுப்பின்படி 30% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். சோளம், நெல், காபி, பழத்தோட்டம், முக்கிய வேளாண் பயிர்க்ள் ஆகும். சங்தன மரம், தைல மரம், மூங்கில், தேக்கு, ரோஸ் வுட் போன்ற கட்டிடங்கள் மற்றும் தளவாடச் சாமன்களுக்கு பயன்படும் மரங்கள் வளர்க்கப்படுகிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads