மேலக்கடம்பூர்

From Wikipedia, the free encyclopedia

மேலக்கடம்பூர்map
Remove ads

மேலக்கடம்பூர் இந்தியாவின் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் கிராமமாகும். மேலக்கடம்பூர் 500 ஏக்கர் பரப்பளவுள்ள சிறிய கிராமம். 1500 மக்கள் தொகை கொண்டது. ஒரு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள்

இது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுகாவில் உள்ளது[4]. வடவாற்றின் கரையில் உள்ளது. செட்டிதாங்கல் வழியாக எய்யலூர், ஆயங்குடி, முட்டம் செல்லும் சாலையில் ஆறாவது கி.மீட்டரில் உள்ளது.

இங்கமைந்துள்ள மிக நுட்பமான சிற்பங்களைக் கொண்ட மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் தொன்மையான சிவாலயமாகும். இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்

Remove ads

கடம்பூர்

1500 மக்கள் தொகை கொண்ட கிராமம், 450 மாணவ, மாணவிகள் படிக்கும் ஓர் நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. பிள்ளைமார்களும், ஆதிதிராவிடர்களும், வன்னியர்களும், பிற இனத்தவரும் வாழ்கின்றனர். நெல் பிரதான விவசாயம், தென்னை, எண்ணெய் பனை, ஆகியவையும் பயிரிடப்படுகின்றன. ஐந்து குளங்கள் உள்ளன. இரண்டு சிறிய அரிசி அரைக்கும் ஆலை உள்ளது. ஒரு கூட்டுறவு பண்டக சாலை,கிராம நூலகம்,ஊராட்சி மன்றம், கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம், மூன்று பேருந்து நிறுத்தங்கள் கட்டிடம் உள்ளன.

வடக்கில் வேளாளர் குல தெய்வ கோயிலும், ஈசானியத்தில் விநாயகர் கோயிலும், மேற்கில் அய்யனார் இருப்பிடமும், திரௌபதி கோயிலும் உள்ளன. ஊரின் நடுவில் அமிர்தகடேசுவரர் ஆலயம் உள்ளது. அதன் நான்கு புறமும் வீதிகள் அமைந்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads