மேல் கோகிஸ்தான் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

மேல் கோகிஸ்தான் மாவட்டம்
Remove ads

மேல் கோகிஸ்தான் மாவட்டம் (Upper Kohistan District), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3][4][5][6] இதன் நிர்வாகத் தலைமையிடம் தாசு நகரம் ஆகும். 2014-ஆம் ஆண்டில் கோஹிஸ்தான் மாவட்டத்தை மேல் கோகிஸ்தான் மற்றும் கீழ் கோகிஸ்தான் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. [2][7]

விரைவான உண்மைகள் மேல் கோகிஸ்தான் மாவட்டம் {ضلع اپر کوہستان, நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மேல் கோகிஸ்தான் மாவட்டத்தின் மக்கள் தொகை 3,07,286 ஆகும். அதில் ஆண்கள் 1,66,774 மற்றும் பெண்கள் 1,40,504 ஆகவுள்ளனர். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்ட மக்களில் இசுலாமியர் அல்லாதவர் 24 பேர் மட்டுமே.[1]இம்ம்மாவட்ட மக்களில் 97.95% தார்திக் மக்கள் கோகிஸ்தானி மொழி பேசுபவர்கள்.[1]

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் 4 தாலுகாக்களைக் கொண்டது.[8][9]அவைகள்:

  • தாசு தாலுகா
  • காண்டியா தாலுகா
  • சியோ தாலுகா
  • ஹர்பன் பாட்சா தாலுகா

மாகாணச் சட்டமன்றப் பிரதிநிதிகள்

இம்மாவட்டம் கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு ஒரு உறுப்பினரை தேர்தல் மூலம் தேர்வு செய்கிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads