2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு

தேசிய மக்கள் கணக்கெடுப்பு From Wikipedia, the free encyclopedia

Remove ads

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு (2017 Census of Pakistan) 15 மார்ச் 2017 முதல் 25 மே 2017 முடிய பாகிஸ்தான் புள்ளியியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.[1][2] 25 ஆகஸ்டு 2017-இல் துவக்க மதிப்பீட்டின்படி பாகிஸ்தான் மக்கள்தொகை 21,27,42,631 (இருபத்தி ஒன்று கோடியே இருபத்தி ஏழு இலட்சத்து நாற்பத்தி இரண்டாயிரத்து அறுநூத்தி முப்பத்தி ஒன்று) என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.[3][4][5]

விளக்கம்

80 மொழிகள் பேசப்படும் பாகிஸ்தானில், மக்கள்தொகை கணக்கெடுப்பை 9 முக்கிய மொழிகளில் பதிவு செய்ய 91,000 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.[6] மக்கள்தொகை கணக்கெடுப்பு 15 மார்ச் 2017 முதல் 13 ஏப்ரல் 2017 முடிய முதல் கட்டமாகவும், பின்னர் 25 ஏப்ரல் 2017 முதல் 24 மே 2017 முடிய இரண்டாம் கட்டமாகவும் மேற்கொள்ளப்பட்டது.[7]

Thumb

தற்காலிக முடிவுகள்

25 ஆகஸ்டு 2017 அன்று பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது.[8] பாகிஸ்தான் மக்கள்தொகை 19 ஆண்டுகளில் 57% உயர்ந்து 207,774,520 ஆக உள்ளதை தற்காலிகமாக கணக்கெடுக்கப்பட்டது.[9][10] பாகிஸ்தான் நிர்வகிக்கும் ஆசாத் காஷ்மீர் மற்றும் ஜில்ஜித்-பல்திஸ்தான் பகுதிகளை தவிர்த்த பாகிஸ்தான் மாகாணங்களின் மொத்த மக்கள்தொகை அறிக்கை 2018-இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[11][12][13][14] பாகிஸ்தான் மொத்த மக்கள்தொகையில் நகர்புற மக்கள்தொகை 7,55,80,000 அல்லது 36.4% ஆகும்.[15]

மேலதிகத் தகவல்கள் நிர்வாக அலகு, குடியிருப்புகள் ...
பாலின அடிப்படையில் மக்கள்தொகை
மக்கள்தொகை மொத்தம் 207,774,520
ஆண்கள் 106,443,520
பெண்கள் 101,331,000

நகர்புற மக்கள்தொகை

பாகிஸ்தானின் 10 மாநகரங்களில் 1998-ஆண்டிலிருந்து 2017 முடிய மக்கள்தொகை வளர்ச்சி 57% வளர்ந்துள்ளது.[16][17]

இந்த 10 முக்கிய நகரங்களின் மொத்த மக்கள்தொகை 1998-இல் 2,34,75,067 ஆக இருந்தது. 2017-இல் இது 4,09,56,232 உயர்ந்துள்ளது.[18][19][20]

மேலதிகத் தகவல்கள் தரம், நகரம் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads