மைக்ரோசாப்ட் வேர்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேர்டு (Microsoft office word) மைக்ரோசாப்டின் உரையாவணைத்தைத் தயாரிக்கும் மென்பொருள் ஆகும். இது முதலில் அக்டோபா 25,1983-ல்[1] எக்ஸிக்ஸிற்கான மல்டி ரூல் வேட் என்றவாறு அறிமுகமானது.[2][3][4] பின்னர் இந்த மென்பொருளானது ஐபின் இசைவான கணினிகளில் மைக்ரோசாட் டாஸ் இயங்குதளம் (1983), ஆப்பிள் மாக்கிண்டோஷ், எஸ். சி. ஓ. யுனிக்ஸ், இயங்கு தளம்/2 மற்றும் மைக்ரோசாட் விண்டோஸ் (1989)-ல் அறிமுகமானது. இது மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளின் ஒரு பகுதியாகும். இது 2003ஆம் ஆண்டுப் பதிப்பில் இருந்து தனியாகவும் சந்தைப் படுத்தப் படுகின்றது.

விரைவான உண்மைகள் உருவாக்குனர், அண்மை வெளியீடு ...
விரைவான உண்மைகள் உருவாக்குனர், அண்மை வெளியீடு ...
Remove ads

நிறுவுதல்

நேரடியாகக் கணினிகளில் இறுவட்டின் மூலம் தொடரிலக்கத்தை தட்டச்சுச் செய்து நிறுவுவதே பெருவழக்காகும் எனினும் பெரிய நிறுவனங்களின் கணினி வலையமைப்பு அதிகாரிகள் இதற்கென நிர்வாக நிறுவல்களை உருவாக்குவார்கள் பின்னர் வலையமைப்பூடாக நிறுவல்கள் அதிவேகத்தில் நிறுவப்படும். இவ்வாறான செய்கைகளில் சேவைப் பொதிகளையும் (Service Packs) ஒருங்கிணைப்பது பெருவழக்காகும்.

சேவைப்பொதிகளை ஒருங்கிணைத்தல்

ஆபிஸ் XP, ஆபிஸ் 2003 மற்றும் அதனில் இருந்தான பதிப்புக்கள் சேவைப்பொதிகளை ஒருங்கிணைத்த நிறுவல்களை ஆதரிக்கும் இதனிலும் பழைய பதிப்புக்கள் இவற்றை ஆதரிக்காது. ஆபிஸ் 2007 இலிருந்தான பதிப்புக்கள் சேவைப்பொதிகளை பிரித்து நிறுவலில் உள்ள மேம்படுத்தல் எனப்பொருள்படும் Update என்னும் கோபுறைக்குள் போடுவதன் மூலம் நிறுவும் போது தானாகவே மேம்படுத்தல்களை நிறுவிக்கொள்ளும்.

சொற்களைத் தேர்வுசெய்ய

  1. ஒரு சொல்லைத் தேர்வுசெய்ய அந்தச் சொல்லில் எங்காவது சுட்டியினால் இரண்டு முறை சொடுக்கவும். இதன்போது அந்தச் சொல்லும் அதைத் தொடர்ந்துவரும் இடைவெளியும் சேர்ந்து தெரிவுசெய்யப்படும். அச்சொல்லில் அடையாளக் குறியீடுகள் (எடுத்துக்காட்டாக ஆச்சரியக் குறி) அதில் தேர்வுசெய்யப்படாது.
  2. ஒரு வசனத்தைத் தேர்செய்ய விசைப்பலகையில் Ctrl உடன் சுட்டியினால் சொடுக்கவும். இதன்போது அடையாளக் குறியீடுகள் உட்பட அந்தச் சொல்லும் அதைத் தொடர்ந்து வரும் இடைவெளியும் தேர்வு செய்யப்படும்.
  3. ஒரு பந்தியைந் தேர்வுசெய்ய சுட்டியினால் மூன்றுமுறை சொடுக்கவும். இதன்போது அந்தப் பந்தி உட்பட பந்தி அடையாளமும் தேர்வு செய்யப்படும்.

விசைப்பலகை குறுக்குவழிகள்

மேலதிகத் தகவல்கள் கட்டளையின் பெயர், மாற்றுதல் ...
Remove ads

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads