மைசூர் மாநிலம்
1947 முதல் 1956 வரை இருந்த இந்திய மாநிலம்; பின்னர் கர்நாடக மாநிலம் என மாறியது From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைசூர் மாநிலம் (Mysore State) என்பது இந்திய ஒன்றியத்தின் ஒரு முன்னாள் மாநிலம் ஆகும். இந்தியக் குடியரசு 1947 இல் உருவான பிறகு மைசூர் இராச்சியத்தின் பிரதேசங்களுக்கு வெளியே உள்ள சில பகுதிகளுடன் சேர்ந்து, 1956 வரை [1] பெங்களூரைத் தலைநகராகக் கொண்டு இந்த மாநிலம் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருந்தது. மொழிவாரியாக கன்னடம் பேசும் ஒரே இன மக்களைக் கொண்ட மாநிலமாக 1956 இல் விரிவடைந்தது. [2] இது பின்னர் கர்நாடக மாநிலம் என பெயர் மாற்றப்பட்டது.
Remove ads
வரலாறு
மைசூர் ராஜ்ஜியம் என்பது பிரித்தானிய இந்திய ஆட்சிக் காலத்தில் இந்திய துணைக் கண்டத்தில் இருந்த மூன்று பெரிய சுதேச அரசுகளில் ஒன்றாகும். 1947 இல் பிரிட்டனிடமிருந்து இந்தியப் பேரரசு சுதந்திரம் பெற்ற பிறகு, மைசூர் மகாராஜா ஜெயச்சாமராஜா உடையார் இந்திய ஒன்றியத்துடன் தனது இராஜ்யத்தை இணைக்கும் ஒப்பந்த்ததில் கையெழுத்திட்டார். மைசூர் இராச்சியத்தின் பிரதேசங்கள் பின்னர் இந்திய ஒன்றியத்துக்குள் ஒரு மாநிலமாக மறுசீரமைக்கப்பட்டது. [3]

1956 ஆம் ஆண்டில், இந்திய அரசு மாநில எல்லைகளை மொழி அடிப்படையில் மறு-சீரமைப்பு செய்தது. 1 நவம்பர் 1956 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் விளைவாக, கன்னடம் பேசும் பெல்காம் ( கோலாப்பூர் வட்டம் தவிர), பிஜப்பூர், தார்வார், வட கன்னட ஆகிய மாவட்டங்கள் பம்பாய் மாநிலத்திலிருந்து பிரித்து மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. [4] ஆந்திர மாநிலத்தில் இருந்து பெல்லாரி மாவட்டம் மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. தென் கனரா மாவட்டம் சென்னை மாநிலத்தில் இருந்தும், கொப்பள், ராய்ச்சூர், குல்பர்கா, பீதார் மாவட்டங்கள் ஐதராபாத் மாநிலத்தில் இருந்தும் பிரித்து மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மேலும், மைசூர் மாநிலத்துடன் சிறிய கூர்க் மாநிலமும் இணைக்கப்பட்டு, மைசூர் மாநிலத்தின் ஒரு மாவட்டமாக ஆக்கப்பட்டது. [5] [6] இந்த மாநிலம் 1973 நவம்பர் முதல் நாள் அன்று கருநாடகம் என்று பெயர் மாற்றபட்டது. [7]
Remove ads
ஆளுநர்கள்

Remove ads
முதலமைச்சர்கள்
இதையும் பார்க்கவும்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads