இழைமணி

From Wikipedia, the free encyclopedia

இழைமணி
Remove ads

உயிரணுவியலில் இழைமணி (Mitochondrion) ஊன்குருத்துஎனப்படுவது மென்சவ்வினால் சூழப்பட்ட மெய்க்கருவுயிரியின் உயிரணுக்களில் காணப்படும் ஒரு நுண்ணுறுப்பு (புன்னங்கம்) ஆகும்[1]. இழைமணி 0.5 - 10 மைக்ரோமீட்டர் விட்டத்தைக் கொண்ட நீள்வட்ட வெளித்தோற்றம் கொண்ட நுண்ணுறுப்பாகும். இவை உயிரணுவின் ஆற்றல் நிலையங்கள் என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இழைமணியில் இருந்துதான் ஆற்றல் காரணியான ஏ.டி.பி (adenosine triphosphate = ATP) உருவாக்கப்பட்டு, பல உயிர் வினைகளுக்கு ஒரு ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது[2]. உயிரணுக்களுக்கு ஆற்றலைக் கொடுப்பதுடன், இவை வேறு சில செயற்பாடுகளையும் கொண்டுள்ளன. குறிகைகள் கொடுத்தல், உயிரணு வளர்ச்சி, உயிரணுக்களில் வேறுபாடு, உயிரணுக்களின் இறப்பு என்னும் தொழிற்பாடுகளிலும் இழைமணி முக்கிய பங்கு வகிக்கிறது[3]. இவைகளிடம் பெறப்படும் கலக் குறியீடுகள் காசுபெசு (Caspase) என்னும் நொதியத்தின் செயலாக்கத்தைத் தூண்டுகின்றன. தொடர்ச்சியாக இந்நொதியங்கள் உயிரணு இறத்தலைத் தூண்டுகின்றன. இழைமணியானது ‘இழைமணி ஒழுங்கின்மை'[4], 'இதய தொழிற்பாட்டு குறைவு'[5] போன்ற பல மனித நோய்களில் பங்காற்றுவதுடன், முதுமையேற்படும் செயற்பாட்டிலும் முக்கிய பங்காற்றுகின்றது.

Thumb
தாயம் மற்றும் மென்சவ்வுகளைக் காட்டும் பாலூட்டிகளின் நுரையீரல் இழையத்திலிருந்து எடுக்கப்பட்ட இழைமணியின் மின்துகள் நுண்படம்.
Thumb
மாதிரி விலங்கு உயிரணுவின் நுண் உறுப்புகள்:
(1) கருவின்கரு அல்லது புன்கரு
(2) உயிரணுக் கரு
(3) இரைபோசோம்
(4) சுரப்பு புடகம் (Vesicle)
(5) அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை
(6) கொல்கி உபகரணம்
(7) கலமென்சவ்வு
(8) அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை
(9) இழைமணி
(10) புன்வெற்றிடம் (Vacuole)
(11) குழியமுதலுரு (Cytosol)
(12) இலைசோசோம்
(13) புன்மையத்தி (Centriole)

இழைமணியில் 500 க்கும் மேற்பட்ட புரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் புரதங்களும் உயிரினம், இழைய வகை போன்றவற்றிற்கு ஏற்ப வேறுபடும். மனிதனின் இதய உயிரணுக்களின் இழைமணியில், 615 வேறுபட்ட புரதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[6]. உயிரணுக்களின் கருவிலேயே டி.என்.ஏ க்கள் காணப்பட்டாலும், இழைமணிகளும் தமக்கேயுரிய டி.என்.ஏ க்களைக் கொண்டுள்ளன. இவற்றில் காணப்படும் டி.என்.ஏ க்களின் இழை வரிசைகள் பாக்டீரியாவின் இழை வரிசைகளை ஒத்து உள்ளதால்[7] இவைகள் பாக்டீரியாவிடம் இருந்து வந்து இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இக்கொள்கைக்கு அக ஒன்றிய வாழ்வுக் கொள்கை (Endosymbiotic) எனப்பெயர். விரிவாக அறிய கலக்கொள்கை பார்க்கவும்.

Remove ads

அமைப்பு

Thumb
இழைமணியின் விரிவான அமைப்பு

இழைமணியின் எண்ணிக்கை ஒரு உயிர் இனத்தைப் பொறுத்து அல்லது இழைய வகையைப் பொறுத்து அமையும். பல வகை உயிரணுக்கள் ஒரு இழைமணியை மட்டும் கொண்டிருக்கும் அதே வேளை வேறு உயிரணுக்கள் பல ஆயிரம் இழைமணிகளைக் கொண்டும் இருக்கும்[8][9]. நுண்ணுறுப்பு பல உள் அமைப்புகளையும், சிறப்புப் பணிகளையும் மேற்கொள்வதாக அமைந்துள்ளது. நுண்ணுறுப்பு ஒரு வெளிச்சவ்வும், ஒரு உட்சவ்வும், இவற்றின் இடையே ஒரு இடைவெளியையும் கொண்டுள்ளது. இழைமணியிலுள்ள வெளிச்சவ்வும் உள்சவ்வும் இரட்டை அடுக்குகளாலான பொசுபோலிப்பிடு மூலக்கூறுகளாலும் புரதங்களாலும் ஆக்கப்பட்டதாக இருக்கும்[8]. ஆனாலும், இவ்விரு சவ்வுகளும் வேறுபட்ட இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. இரு சவ்வு கொண்ட கட்டமைப்பின் காரணமாக, இழைமணியானது ஐந்து தெளிவாக வேறுபட்ட அறைகளைக் கொண்டிருக்கின்றது. அவையாவன வெளிச்சவ்வு, வெளிச்சவ்வுக்கும் உட்சவ்வுக்கும் இடையில் காணப்படும் இடைவெளி, அந்த இடைவெளியானது உள்நோக்கி தள்ளப்பட்டு உருவாகும் கிரிசுட்டே எனப்படும் நீட்சிகள், உட்சவ்வு, உட்சவ்வின் உள்ளாக காணப்படும் தாயம் (matrix) என்ற அமைப்பு. பெரும்பாலான தொழிற்பாடுகள் வெளிச்சவ்வுக்கும், உட்சவ்வுக்குமான இடைவெளியிலேயே நடைபெறுகின்றன.

Remove ads

குறிப்புகளும் மேற்கோள்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads