மொகாவி பாலைவனம்
தென்மேற்கு அமெரிக்காவில் உள்ள பாலைவனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொகாவி பாலைவனம் (Mojave Desert, உச்சரிப்பு: /m[invalid input: 'ɵ']ˈhɑːviː/ mo-hah-vee) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவின் தென்கிழக்கின் பெரும்பகுதியிலும் தெற்கு நெவாடா, தென்மேற்கு யூட்டா , மற்றும் வடமேற்கு அரிசோனாவில் சிறிதளவிலும் அமைந்துள்ள மழை பெறாத, பெரும்பாலும் வறண்ட நிலப்பகுதி ஆகும். இது மொகாவி மக்களின் மொழியில் நீரை அடுத்த என்ற பொருள்படும் அமக்காவி என்பதன் மறுவலாகும்.[6] மொகாவி பாலைவனம் வழமையான மலைகளும் தாழ்நிலங்களும் கொண்ட நிலப்பகுதியாக விளங்குகிறது. 2,000 அடிக்கு (610 மீ) உயரமானப் பகுதிகள் உயர் பாலைவனம் எனப்படுகிறது; இருப்பினும், மொகாவி பாலைவனத்தின் கெட்ட பெயரெடுத்த சாவுப் பள்ளத்தாக்கு வட அமெரிக்காவிலேயே மிகக் குறைந்த உயரத்தில், கடல்மட்டத்திற்கு கீழே 282 அடியில்(86 மீ) அமைந்துள்ளது.
மொகாவி பாலைவனத்தின் எல்லைகளை பொதுவாக ஜோசுவா மரங்களைக் (Yucca brevifolia) கொண்டு வரையறுக்கலாம். இவை இந்தப் பாலைவனத்தின் அடையாள இனமாக கருதப்படுகிறது. டெகாசபி மலைகளும் சான் காபிரியல், சான் பெர்னார்டொ மலைத்தொடர்களும் இதன் அமைப்புசார் எல்லைகளாக விளங்குகின்றன. இந்த மலைத்தொடர்களின் எல்லைகளை மிகத்தெளிவாக சான் அன்றியாஸ் பிளவும் கார்லாக் பிளவும் வரையறுக்கின்றன. வடக்கில் பெரும் தாழ்நில புதர் இசுடெப்பியும் தெற்கிலும் கிழக்கிலும் வெப்பமான சோனோரன் பாலைவனமும் அமைந்துள்ளன. இப்பாலைவனத்தில் 1,750 முதல் 2,000 வரையிலான தாவர இனங்கள் உள்ளன.[7]
மொகாவி பாலைவனத்தின் பெரும்பகுதியில் மக்கள்தொகை மிகவும் குறைவாக இருந்தாலும் பல பெரிய நகரங்கள் (கலிபோர்னியாவில் இலான்கேசுட்டர், பால்ம்டேல், விக்டர்வில், நெவாடாவில் ஹெண்டர்சன், லாஸ் வேகஸ் நகரங்கள்) அமைந்துள்ளன. மேலும் இங்கு மொகாவி வானூர்தி மற்றும் விண்ணூர்தி நிலையம் அமைந்துள்ளது.
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads