மொகாவோ கற்குகைகள்
சீனாவின் கன்சு, டன்ஹுவாங் நகருக்கு அருகில் உள்ள குகைகள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொகாவோ கற்குகைகள் (Mogao Caves, Mogao Grottoes) என்பது வட மேற்கு சீனாவின் கான்சு மாநிலத்தில், மிங்சா மலையின் கிழக்கு அடிவாரத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் செதுக்கப்பட்ட கற்குகைகள் ஆகும். இவை ஆயிரம் புத்தர் கற்குகைகள் (Thousand Buddha Grottoes) எனவும் அழைக்கப்படுகின்றன. இதுவரை உலகளாவிய நிலையில் அளவில் மிகப் பெரிய, மிகவும் முழுமையாகப் பேணப்பட்டுள்ள புத்த மதக் கலைக்கருவூலமாக இவை திகழ்கின்றன. 1987ஆம் ஆண்டு, உலக பாரம்பரியக் களங்கள் மொகாவோ கற்குகைகள் சேர்க்கப்பட்டன. இங்குள்ள புத்தரின் உருவச்சிலைகள், சுவர் ஓவியங்கள் ஆகியவற்றினால், இக்குகை உலகப் புகழ்பெற்றுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புத்த மதக் கலையை இது பிரதிபலித்துள்ளது என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.[1]
Remove ads
அமைவிடம்
வட மேற்கு சீனாவின் கான்சு மாநிலத்து துன்ஹுவாங் நகரின் புறநகரில் மிங்சா மலை ஒன்று உள்ளது. இம்மலையின் கிழக்கு அடிவாரத்தில் பிரிந்துவிட்ட மலைப் பகுதியில் தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் பாதையில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் ஏராளமான குகைகள் செதுக்கபட்டுள்ளன. இக்குகைகள், மேல் பகுதி முதல் கீழ் பகுதி வரை 5 தட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒழுங்கான முறையில் செதுக்கப்பட்ட மிகவும் கம்பீரமான, உலகில் புகழ்பெற்ற கற்குகை துன்ஹுவாங் முகௌக் கற்குகை ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
