மொக்சினா கித்வாய்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொக்சினா கித்வாய் (Mohsina Kidwai) (பிறப்பு 1 ஜனவரி 1932) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கியைச் சேர்ந்தவர். தற்போது இவர் சத்தீஉசுகரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.[1][2] இவர் காங்கிரசு செயற் குழுவில், இந்தியக் காங்கிரசு கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பிலும் மற்றும் அகில இந்தியக் காங்கிரசு குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.[3][4]

Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
மொக்சினா கித்வாய் முல்லா குதுப்-உத்-தின் அகமது மற்றும் ஜெகரா கட்டூன் ஆகியோரின் மகளாகப் பிறந்தார். இவர் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள அகமதுபூர் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தனது இடைநிலை கல்வியினை பெண்கள் கல்லூரி, அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம், அலிகரில் முடித்தார்.
தொழில்
மொக்சினா கித்வாய் உத்தரபிரதேசம் மற்றும் இந்திய அரசில் பல முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.[2]
அகில இந்தியக் காங்கிரசு கட்சியில் பொதுச் செயலாளர் உட்படக் காங்கிரசு கட்சிக்குள் கித்வாய் பல்வேறு தலைமைப் பதவிகளை வகித்துள்ளார். இவர் காங்கிரசு கட்சித் தலைவர் சோனியா காந்திகு நெருக்கமாக இருப்பதாக அறியப்படுகிறார்.[5]
சோனியா காந்திக்கு முந்தைய நாட்களில் கித்வாய் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற, காங்கிரசு (டி) தலைவராக இருந்தார்.
தற்போது இவர் சத்தீசுகரின் ராய்ப்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.[2]
இவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும் , அசாம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் தேர்தல் அறிக்கைகளைச் செயல்படுத்தும் குழுக்களின் அமைப்பாளராகவும் செயல்பட்டார்.[3]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
மொக்சினா கித்வாய் 17 டிசம்பர் 1953இல் கலீல் ஆர். கித்வாயை மணந்தார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.[2]
வகித்த பதவிகள்
கித்வாய் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக 1960ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இப்பதவியினை 1977ஆம் ஆண்டு வரை வகித்தார். இக்காலத்தில் பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 1978ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அசம்கார் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1980ஆம் நடைபெற்ற ஏழாவது மக்களவைப் பொதுத் தேர்தலில் மீரட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கால கட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் மறுவாழ்வு அமைச்சர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1984ஆம் நடைபெற்ற எட்டாவது இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று 1989வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் ஊரக வளர்ச்சி, சுகாதாரத் துறை, போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். மேலும் 2004ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக சத்தீசுகரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்துள்ளார். கித்வாய், தனது வாழ்க்கையில் பின்வரும் பல பதவிகளை வகித்துள்ளார்:[2]
Remove ads
வெளிநாட்டு பயணம்
கித்வாய், அலுவலகப் பயணமாக அமெரிக்கா, இங்கிலாந்து, தான்சானியா, மொரிசியசு, அங்கேரி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், மகளிர் கருத்தரங்கில் கலந்து கொள்ள ஜெர்மனிக்கும், உலக அமைதி மாநாட்டில் கலந்துகொள்ளச் சோவியத் ரஷ்யா, புரூணை, அங்கேரிக்கும் சென்று வந்துள்ளார்.[6] ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார சபைக் கூட்டத்திலும் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடு அவையின் உலக நகர அமைப்பின் 10வது கருத்தரங்கிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.[7] இந்திய நல்லெண்ணக் குழுவின் தூதுவராக வியட்நாமிற்கும் தாய்லாந்திற்கும் சென்று வந்துள்ளார். 2005ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையிலும் இந்தியாவின் சார்பில் உரை நிகழ்த்தியுள்ளார்.[8]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads