மோகினி (தமிழ் நடிகை)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மோகினி (Mohini) என்கிற மோகினி கிறிஸ்டினா ஸ்ரீனிவாசன், தற்போது ஒரு கத்தோலிக்க நற்செய்தியாளராக உள்ளார். இவர் முன்னாள் இந்திய நடிகை ஆவார். இவர், தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார், முக்கியமாக மலையாளம், தமிழ் மற்றும் சில தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் மோகினி கிறிஸ்டினா ஸ்ரீனிவாசன், பிறப்பு ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

  • நடிகை மோகினியின் இயற்பெயர் மகாலட்சுமி என்பதே ஆகும். இவர் 1971ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள தஞ்சாவூரில் ஸ்ரீனிவாசன் ஐயங்கார்–சுந்தரி ஆகியோருக்கு தமிழ் பிராமண குடும்பத்தில் மகளாக பிறந்தார்.
  • பின்பு கோயம்புத்தூரில் உள்ள பிரான்சிஸ் ஆங்கிலோ-இந்தியப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை மேற்கொண்டார்.
  • அவர் பரத் என்பவரை மணந்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார். பிறகு 2006 காலகட்டத்தில் அங்குள்ள ஆதிக்க மதமான கிறுத்துவத்தை மோகினி தழுவி கொண்டு கத்தோலிக்க திருச்சபைக்கு மாறினார்.[1][2]
Remove ads

திருச்சபை பணி

மோகினி புனித மைக்கேல் கத்தோலிக்க குழு உறுப்பினராக உள்ளார்.[3] இது ஒரு ஆன்மீக ஆலோசனையை இலக்காக கொண்டிருக்கும் கத்தோலிக்க அமைப்பாகும். அவர் செயின்ட் மைக்கேல் அகாதமியில் ஆன்மீக நலன் மற்றும் மீட்பு ஆலோசனை பயிலும் ஒரு மாணவர் ஆவார்.[4] மோகினி மீட்பு ஆலோசனை பிரிவில் பட்டம் பெறுவதற்காக பணிபுரிந்து வருகிறார். பட்டப்படிப்பு முடித்த பின் அவர் செயிண்ட் பெடரெ பையோ மையத்தில் மீட்பு ஆலோசனை வழங்குபவராக பணிபுரியலாம்.[5]

Remove ads

தொழில்முறை நடிப்பு வாழ்க்கை

மோகினி தனது முதல் படமான ஈரமான ரோஜாவில் நடித்ததற்குப் பிறகு, 1991 ஆம் ஆண்டு டான்சர் படத்தில் அக்சய் குமாருடன் கதாநாயகியாக நடிப்பதற்கு பாலிவுட் சென்றார். 1999 ல் மோகினி, பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் குடியேறினார். இத் தம்பதியருக்கு, ருத்ராக்ஷ் மற்றும் அனிருத் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.

தொலைக்காட்சித்தொடர்கள்

மோகினி, சன் தொலைக்காட்சியில் காதல் பகடை (1996), ராஜராஜேஸ்வரி (2006), பொதிகை தொலைக்காட்சியில், ஒரு பெண்ணின் கதை (1998) போன்ற தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் மற்றும் ஜெய்ஹிந்த் தொலைக்காட்சியில் "கதனார் கடம்பத்து கதனார்" (2007) என்கிற மலையாளத் தொடரிலும் நடித்துள்ளார்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads