மோக்கா மாவட்டம்

மொரீசியசு நாட்டு மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

மோக்கா மாவட்டம்
Remove ads

இதே பெயரில் பஞ்சாபில் உள்ள மாவட்டத்தைப் பார்க்க, மோகா மாவட்டம் கட்டுரையைப் பார்க்கவும்.

விரைவான உண்மைகள் மோக்காMoka, நாடு ...

மோக்கா மாவட்டம் (Moka District) மொரீசியசு தீவின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும். 230.5 கி.மீ2 பரப்பளவில் மோக்கா மாவட்டம் விரிந்துள்ளது. 31 திசம்பர் 2012 இன் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு 81820 நபர்கள் வாழ்கின்றனர்[2]. இம்மாவட்டத்தின் கிழக்கே பிலாக் மாவட்டமும், வடக்கே பம்பிளிமாசசு மாவட்டமும், தெற்கே கிராண்ட் போர்ட் மாவட்டமும் மேற்கே பிலெய்ன்சு வில்ஹெம்சு மாவட்டமும், வட மேற்கே போர்ட் லூயிசு மாவட்டமும் அமைந்துள்ளன.

Remove ads

மக்கள்தொகை

அண்மையக் கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ 80,000 மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றனர். இவர்களில் ஏறத்தாழ 50,000 பேர் கிரியோல் மொழியைத் தாய்மொழியாகவும், ஏனையோர் போச்புரி, தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகவும் பேசுகின்றனர்.

மோக்கா மாவட்டம் பல்வேறு மண்டலங்களை உள்ளடக்கியுள்ளது. சில மண்டலங்கள் மேலும் துணை நகரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன[2][3].

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads