மோசூர் முத்துமாரியம்மன் திருக்கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மோசூர் முத்துமாரியம்மன் திருக்கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா, மோசூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஒரு இந்துக் கோயில் ஆகும். இது குட்டைக்கரையம்மன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் மோசூர் முத்துமாரியம்மன் திருக்கோயில், பெயர் ...
Remove ads

அம்மன் துதி

தனி சன்னதி

முத்துமாரியம்மன் ஆலயத்தில் தவக்காளியம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. சன்னதியின் முன்பாக பிள்ளையாரும், முருகனும் காட்சியளிக்கின்றனர்.

வழிபாடுகள்

ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுதல், புடவை சாற்றுதல், தொட்டில் கட்டுதல் போன்ற வழிபாடுகள் செய்து வருகின்றனர். பௌர்ணமி மற்றும் அமாவாசை போன்ற நாட்களில் அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது. இந்நாளில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிகின்றனர்.

திருவிழாக்கள்

ஆடித்திருவிழா

ஆலயத்தில் ஆடி உற்சவத்திருவிழா வருடாந்தோறும் சிறப்பாக நடந்துவருகிறது. நாள்தோறும் சிறப்பு பூசைகளும், அலங்காரமும், முக்கியமாக ஆடி அமாவாசை அன்று இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றுவருகிறது.

ஆடி நான்காம் வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று மலர் அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலாவானது நடைபெறும். இந்த நாளன்று பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் படைத்தல், கூழ் வார்த்தல் போன்றவை நிகழ்த்திவருகின்றனர். ஆடி வெள்ளி நாட்களில் திரளான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

ஜாத்திரை திருவிழா

சித்திரை மாதத்தில் ஊர் சாட்டுதல் நிகழ்ந்து, ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழாவே ஜாத்திரை ஆகும். ஒரு வாரத்திற்கு அம்மன் கரகமானது ஊரைச் சுற்றி வரும். புதன்கிழமையன்று கிராமதேவி ஏரிக்கரை பொன்னியம்மன் ஆலயத்திலிருந்து கரகம் சிங்காரிக்கப்பட்டு பம்பை, உடுக்கை, மேளதாளத்தோடு பக்தர்கள் முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு வந்து சேருவர். சனிக்கிழமையன்று, இரவு நேர்த்திக்கடன் செய்யும் பக்தர்கள் வேப்பஞ்சலை செலுத்தி, கும்பச்சோறு படைத்து வழிபடுகின்றனர்.

Remove ads

அம்மன் அலங்காரம்

அம்மனுக்கு பால்,தயிர், இளநீர் போன்றவை அபிஷேகத்திற்கும், மலர்கள் அம்மன் அலங்காரத்திற்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அருகிலுள்ள பழமையான கோவில்கள்

  • அகத்தீஸ்வரர் கோவில்
  • பொன்னியம்மன் கோவில்
  • பச்சையம்மன் கோவில்
  • திரௌபதியம்மன் கோவில்

திருக்கோயிலுக்கு செல்லும் வழிகள்

சென்னை-அரக்கோணம் நெடுஞ்சாலைக்கு இடையே, திருவாலங்காடு ரயில் நிலையம் வழியாக கோயிலை சென்றடையலாம்.

சென்னை-அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு இடையே, மோசூர் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து சுமார் 5 நிமிடம் நடை பயண தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.

கட்டிட பணிகள்

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்களும் ஒன்றினைந்து கட்டிட வேலைப்பாடுகளை மென்மேலும் நடத்திவருகின்றனர்.அம்மனை குலதெய்வமாக கொண்ட சந்ததியினர் அம்மனை வழிபட்டுச்செல்கின்றனர்.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads