மோய் சாய் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

மோய் சாய் மாவட்டம்map
Remove ads

மேய் சாய் மாவட்டம் (Mae Sai) (தாய்: แม่สาย, தாய்லாந்து நாட்டின் வடக்கில் உள்ள சியாங் ராய் மாகாணத்தின் வடகோடியில், தாய்லாந்து - மியான்மர் பன்னாட்டு எல்லையில் அமைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மோய் சாய் நகரம் ஆகும். பன்னாட்டு ஆசிய நெடுஞ்சாலை 2, மாயி சாய் நகரத்தின் வழியாக மியான்மருக்குச் செல்கிறது. 285 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 2005ல் 86,298 ஆக இருந்தது.

விரைவான உண்மைகள் மேய் சாய் மாவட்டம் แม่สาย, மாகாணம் ...

தங்க முக்கோணத்தில் அமைந்த மோய் சாய் மாவட்டம், சியாங் ராய் மாகாணத் தலைமையிடமான சியாங் ராய் நகரத்திற்கு வடக்கில் 259 கி.மீ. தொலைவிலும், தேசியத் தலைநகரமான பாங்காக்கிற்கு வடக்கே 850 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இம்மாவட்டத்தில் போதைப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது.[1]

இம்மாவட்டத்தில் உள்ள தோய் நாங் நோன் மலைத்தொடரில் உள்ள தாம் இலுவாங் நாங் நோன் குகையில் 23 சூன் 2018 அன்று 12 சிறுவர்களும், ஒரு கால்பந்தாட்ட பயிற்சியாளரும் மழை வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை பன்னாட்டு மீட்பு குழுவினர் 10 சூலை 2018 குகையிலிருந்து மீட்டனர்.[2]

Thumb
சூன், 2018 அன்று தோய் நாங் நோன் மலைத்தொடரில் உள்ள தாம் இலுவாங் நாங் நோன் குகையில் சிக்கிய சிறுவர்கள்
Remove ads

நிர்வாகம்

நிர்வாக வசதிக்காக இம்மாவட்டம் எட்டு துணை மாவட்டங்களாகவும், 92 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மோய் சாய் மற்றும் இரண்டு துணை மாவட்ட நகராட்சிகளையும் கொண்டது.

மேலதிகத் தகவல்கள் எண், துணை மாவட்டப் பெயர் ...
Remove ads

இதனையும் காண்க

Thumb
மோய் சாய் மாவட்டத்தின் தோய் நாங் நோன் மலைத்தொடர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads