ம. கனகரத்தினம்

இலங்கை அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மயில்வாகனம் கனகரத்தினம் (Mylvaganam Canagaratnam, 15 ஏப்ரல் 1924 20 ஏப்ரல் 1980) என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

விரைவான உண்மைகள் எம். கனகரத்தினம்M. Canagaratnamநாஉ, இலங்கை நாடாளுமன்றம் பொத்துவில் ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

கனகரத்தினம் 1924 ஏப்ரல் 15 இல் பிறந்தவர்.[1] இவர் 1977 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக இரட்டை-அங்கத்தவர் தொகுதியான பொத்துவிலில் போட்டியிட்டு இரண்டாவதாகத் தெரிவாகி நாடாளுமன்றம் சென்றார்.[2] தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களில் (1977 திசம்பரில்) இவர் அன்றைய ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். இதன் மூலம் அவர் மட்டக்களப்புக்கான மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3][4]

Remove ads

தாக்குதல்

கனகரத்தினம் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு முன்னால் 1978 சனவரி 27 இல் இனந்தெரியாதோரால் சுடப்பட்டார்.[5][6] இவர் மீதான தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[4][7] படுகாயமடைந்த நிலையில் 1980 ஏப்ரல் 20 இல் இவர் காலமானார்.[3][6]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads