மட்டக்களப்பு மாவட்டம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மட்டக்களப்பு மாவட்டம் (Batticaloa district) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு நகரம் இதன் தலைநகரமாகும். மட்டக்களப்பு மாவட்டம் 3 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 346 கிராமசேவகர் பிரிவுகளையும் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[4]
மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு ஏறத்தாழ 2633.1 சதுர கிலோமீட்டர் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கே திருகோணமலை மாவட்டம், வடமேற்கே பொலன்னறுவை மாவட்டம், தெற்கு மற்றும் தென்மேற்கே அம்பாறை மாவட்டம், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவை உள்ளன.
இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழரும், அடுத்தபடியாக முஸ்லிம்களும், பின்னர் பரங்கியரும் வாழ்கின்றனர்.
Remove ads
மக்கள் தொகையியல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை 2012 இல் 525,142 ஆக இருந்தது.[2] இம்மாவட்டத்தின் இலங்கைத் தமிழர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.
இனம்
சமயம்
நிர்வாக அலகு
Remove ads
அரசியலும் அரசாங்கமும்
உள்ளூர் அரசாங்கம்
மட்டக்களப்பு மாவட்டம் ஒரு மாநகர சபையையும் இரு நகர சபைகளையும் ஒன்பது பிரதேச சபைகளையும் கொண்ட 12 உள்ளூராட்சி சபைகளைக் கொண்டுள்ளது.[4]
உசாத்துணை
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads