ம. மு. சுப்பிரமணியம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மயில்வாகனம் முதலியார் சுப்பிரமணியம் (Mylvaganam Mudaliyar Subramaniam, (1870 1945) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை உறுப்பினரும் ஆவார்.

விரைவான உண்மைகள் எம். எம். சுப்பிரமணியம்M. M. Subramaniamஇலங்கை சட்டப்பேரவை, அரசாங்க சபை உறுப்பினர், திருகோணமலைக்கான சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

சுப்பிரமணியம் ஏறத்தாழ 1870 அளவில் பிறந்தார்.[1] இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் சம்பத்தீவு என்ற இடத்தில் தென்னந்தோட்டங்களுக்கு உரிமையாளராகவிருந்த மயில்வாகனம் முதலியாருக்குப் பிறந்தார்.[1] சுப்பிரமணியத்திற்கு மூன்று மகன்கள்: அழகராஜா, தர்மராஜா, மாணிக்கராஜா ஆகியோர் ஆவர்.[1]

பணி

சுப்பிரமணியம் அரச வழக்கறிஞராகப் பணியாற்றியவர். திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபையில் உறுப்பினராக இருந்தவர்.[1] 1924 இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தெரிவானார்.[1][2][3] 1931 இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் திருகோணமலை-மட்டக்களப்புத் தொகுதியில் போட்டியிட்டு இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவானார்.[1][4] 1931 சூலையில் புதிய அரசாங்க சபை கூடிய போது இவர் குழுக்களுக்கான துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 1936 அரசாங்க சபைத் தேர்தலில் திருகோணமலை-மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு ஈ. ஆர். தம்பிமுத்துவிடம் 7,429 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[6]

சுப்பிரமணியம் 1945 இல் காலமானார்.[1] இவரது மகன் எஸ். எம். மாணிக்கராசா திருகோணமலைத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

Remove ads

தேர்தல் வரலாறு

மேலதிகத் தகவல்கள் தேர்தல், தொகுதி ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads