யங் இந்தியா

காந்தியம், விடுதலை இந்தியாவுக்கான இலக்கியம் From Wikipedia, the free encyclopedia

யங் இந்தியா
Remove ads

யங்இந்தியா (ஆங்கிலம்-Young India) என்பது, இந்தியாவில் இருந்து வெளியான, ஆங்கில வார இதழ் / வார ஏடு ஆகும். இதனை காந்தி, 1919 ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு வரை வெளியிட்டார்.

Thumb
யங்இந்தியா

காந்தி தனது அறப் போராட்டம் குறித்தக் கொள்கைகளை, இவ்வேட்டில் விளக்கிக் கட்டுரைகளை எழுதினார். அதன்வழியே இந்தியாவுக்கு விடுதலைக் கிடைக்கப் பாடுபட்டார்.[1]

இதழாசிரியப் பணி

சத்தியாகிரக ஆதரவாளரான, "பாம்பே கிரானிக்கிள்(Bombay Chronicle) பத்திரிகையின் ஆசிரியர் ஹார்னிமேன் நாடுகடத்தப்பட்ட போது, அப்பத்திரிகை சார்பில் வெளியான "யங்இந்தியா பத்திரிகைக்கும் காந்தி ஆசிரியரானார். நவஜீவன் (குஜராத்தி), ஹரிஜன் (ஆங்கிலம்), அரிஜன் சேவக் (இந்தி) மற்றும் அரிஜன் பந்து (குஜராத்தி) ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார்.

காந்தியடிகள் சிறைசென்ற நேரங்களிலெல்லாம் அவரது 'யங்இந்தியா' இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் இராஜாஜி, மதுரை ஜார்ஜ் ஜோசப் , ஜே.சி.குமரப்பா போன்றவர்கள் ஆவர். ஜே.சி.குமரப்பா காந்தியின் 'ஹரிஜன்' இதழுக்கும் ஆசிரியராய் இருந்துள்ளார்.[2]

Remove ads

எழுத்தாக்கம்

கிராமப்புறங்களில் காணப்படும் தீண்டாமையையும், ஏழ்மையையும் ஒழிக்க, காந்தி அவ்விதழ்களைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார். தன்னுடையக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே, தனது இதழ்களை நடத்துவதாக அவர் தெரிவித்தார். காந்தியின் எழுத்துக்கள் அவதூறாகவும் வெறுப்பை உமிழ்வதாகவும் இருக்கின்றன என்றும் கூறினார்கள்.

என காந்தி கூறினார். மேலும், இந்துக்களோ, இசுலாமியர்களோ, குசராத்திகளோ தமிழர்களோ அல்லது வங்கத்தினரோ அவர்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்றார்.

Remove ads

கட்டுப்பாடு

ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுதினாலும், அதற்காக அப்பத்திரிகை ஆசிரியர் மன்னிப்புக் கேட்க வேண்டியது இல்லை. அவ்வாறு மன்னிப்புக் கேட்பதைவிட பத்திரிகையை மூடிவிடுவது சிறந்தது என்ற கருத்தைக் கொண்டிருந்தார். பத்திரிகை சட்டம் (1910), தொடர்பாக கேட்டபோது,

என்றார்.

அச்சு இயந்திரங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போது, கையால் எழுதிக்கூட, இதழ்களை வெளியிட்டுக் கொள்ள முடியும் என்றார். ஒரே நேரத்தில் 50 பேருக்கு ஒரு செய்தியை எழுதச் சொல்லி, அவர்கள் அதை கைநகெலடுத்து எடுத்து, பல மடங்காக்கி, மற்றவருக்கு அளித்துப் பரவச் செய்யும் முறையை தெளிவாக விளக்கினார்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads