யசோவர்மன் (பரமார வம்சம்)
பரமார அரசன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யசோவர்மன் (Yashovarman) ஆட்சிக்காலம் பொ.ச. 1133-1142 ) மத்திய இந்தியாவின் மால்வா பகுதியில் ஆட்சி செய்த பரமரா வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசனாவான். இவன் சோலாங்கி மன்னன் செயசிம்ம சித்தராசனால் தோற்கடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். மேலும் பொ.ச. 1134க்குப் பிறகு சோலங்கியர்யர்களுக்கு அடிபணிந்து ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
யசோவர்மன் தன் தந்தை நரவர்மனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தான். இவனது பொ.ச.1135 ஆண்டு உஜ்ஜைன் கல்வெட்டு இவனை மகாராஜா யசோவர்ம தேவன் என்று குறிப்பிடுகிறது. இந்த சமசுகிருத மொழி கல்வெட்டு ஒரு கிராமத்தின் மானியத்தை பதிவு செய்கிறது. [1]
பொ.ச.1134 வாக்கில், சந்தேல மன்னன் மதனவர்மன், பேட்வா ஆற்றங்கரையில் அமைந்திருந்த பரமரா இராச்சியத்தின் கிழக்குப் பகுதிகளைக் கைப்பற்றினான் என அவனது அவுகாசி மானியக் கல்வெட்டு மூலம் தெரிகிறது. மேற்கு எல்லையில், யசோவர்மன் சோலாங்கிய மன்னன் செயசிம்ம சித்தராசனிடம் தோல்வியடைந்தான்.[2]
Remove ads
செயசிம்ம சித்தராசனிடம் ஏற்பட்டத் தோல்வி
யசோவர்மன் குசராத்தின் சோலாங்கிய மன்னன் செயசிம்மனால் தோற்கடிக்கப்பட்டான் என்பதை பல வெளியீடுகள், கல்வெட்டுகள் உட்பட பல ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. யசோவர்மனின் தந்தை நரவர்மன்தான் செயசிம்மனால் தோற்கடிக்கப்பட்டதாக சில சரித்திரங்கள் கூறுகின்றன. சோலாங்கிய-பரமரா யுத்தம் நரவர்மன் காலத்தில் ஆரம்பித்து யசோவர்மனின் ஆட்சிக் காலத்தில் முடிவடைந்ததாகத் தெரிகிறது. [3]
சமகால சோலாங்கிய அரசவையில் இருந்த சைன அறிஞரான ஹேமச்சந்திரரின் கூற்றுப்படி , செயசிம்மன் புனித நகரமான உஜ்ஜைனிக்கு செல்ல விரும்பியதால் பரமரா இராச்சியத்தின் மீது படையெடுத்தான். [4] 14ஆம் நூற்றாண்டின் எழுத்தாளர் மெருதுங்கா தனது பிரபந்த-சிந்தாமணி என்ற நூலில் போருக்கான வேறு காரணத்தைக் குறிப்பிடுகிறார். மெருதுங்காவின் கூற்றுப்படி, செயசிம்மன் யாத்திரைக்கு சென்றிருந்தபோது யசோவர்மன் சோலாங்கிய தலைநகர் மீது படையெடுத்தாரன். அதற்கு பதில் செயசிம்மன் பரமாரவின் தலைநகர் தார் நகரின் மீது படையெடுத்தான். [5] மெருதுங்காவின் கணக்கு நம்பத்தகுந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் இந்த நேரத்தில் பரமாரர்கள் சக்தி வாய்ந்த சோலாங்கிய இராச்சியத்தின் மீது படையெடுக்க மிகவும் பலவீனமாக இருந்தனர். [3]
பொ.ச. 1139 ஆண்டு தாகோத் கல்வெட்டு, செயசிம்மன் மாலவாவின் (தற்போதைய மால்வா, மத்தியப் பிரதேசம்) மன்னனை சிறையில் அடைத்ததாகக் கூறுகிறது. [6] இது ஹேமச்சந்திரனால் ஆதரிக்கப்பட்டது. [7] இந்தத் தோல்வியின் விளைவாக, அதன் தலைநகரான தார் உட்பட பரமரா இராச்சியத்தின் பெரும் பகுதி சோலாங்கிய ஆட்சியின் கீழ் வந்தது. செயசிம்மன் மகாதேவனை அவந்தி - மண்டல (மாளவா) ஆளுநராக நியமித்தான். [8] சோலாங்கிய மன்னன் அவந்தி-நாதன் ("அவந்தியின் இறைவன்") என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டான். இது அவரது பொ.ச.1137 காலா கல்வெட்டு மூலம் சான்றளிக்கப்பட்டது. [6]
பொ.ச. 1136-1143 காலத்தில் தார் நகரமும் உஜ்ஜைனியும் சோலாங்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. [9] யசோவர்மனுக்குப் பிறகு முதலாம் ஜெயவர்மன் தார் நகரம் அல்லது குறைந்தபட்சம் முன்னாள் பரமாரப் பிரதேசத்தின் ஒரு பகுதியையாவது மீட்டெடுக்க முடிந்தது. [2]
Remove ads
சான்றுகள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads