சந்தேலர்கள்

From Wikipedia, the free encyclopedia

சந்தேலர்கள்
Remove ads

சந்தேலர்கள் (Chandela or Chandel) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலப் பகுதிகள் கொண்ட புந்தேல்கண்ட் பிரதேசத்தை ஆண்ட இராஜபுத்திர அரசகுலத்தை சேர்ந்தவர்கள்.[1] சந்தேலர்கள் புந்தேல்கண்ட் பகுதியை கி பி பத்தாம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு முடிய, கஜுராஹோவில் கலிஞ்சர் மற்றும் மகோபா ஆகிய நகரங்களை தலைநகராகக் கொண்டு அரசாண்ட மன்னர்கள்.

விரைவான உண்மைகள் சந்தேல வம்சம், தலைநகரம் ...
Thumb
கஜுராஹோ கோயிலின் கட்டிடக்கலை
Thumb
கஜுராஹோவில் மன்னர் லெட்சுமனவர்மன் கட்டிய இலக்குவன் கோயில்

சந்தேல மன்னர் வித்தியாதரன் ஆட்சிக் காலத்தில் கஜினி முகமது, இந்தியாவின் மீது படையெடுத்து கலிஞ்சர் கோட்டையை தாக்கினான்.

சந்தேலர் எனும் சொல்லிற்குப் பொருள் சந்திர குலத்தவர்கள் எனபதாகும்.[2] [3][4][5]

மன்னர் வித்தியாதரன் காலத்தில் (1017–29) கஜுராஹோவில் உள்ள கந்தாரிய மகாதேவர் கோயில் மற்றும் கலிஞ்சர் கோட்டை சிறப்புடன் விளங்கியது.[6]

Remove ads

வரலாறு

கி பி 10 முதல் 13-ஆம் நூற்றாண்டு முடிய மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியை ஆண்ட சந்தேல ஆட்சியாளர்களின் முதல் தலைநகரம் கஜுராஹோ ஆகும். பின்னர் தலைநகரத்தை மகோபாவிற்கு மாற்றினர்.

கஜுரஹோ நகரத்தை தலைநகராகக் கொண்ட சந்தேல அரசு, கூர்ஜர-பிரதிகார பேரரசின் பகுதியாக இருந்தது.[7] கூர்ஜர-பிரதிகார பேரரசிற்கு திறை செலுத்தி ஆண்ட சந்தேல அரசை, நன்னூகா முதல் ஹம்மிரவர்மன் முடிய பல மன்னர்கள் ஆண்டனர். கூர்ஜர-பிரதிகார பேரரசு வீழ்ச்சையடைந்த பின்னர் தனியுரிமையுடன் சந்தேல அரசை ஆண்டனர். சந்தேல அரசர்களில் புகழ் பெற்ற மன்னர் வித்தியாதரன் (1017–1029) ஆவார்.

சந்தேல அரசின் நிறுவனர் நன்னுகா என்பவர் கஜுராஹோ நகரத்தை தலைநகராகக் கொண்டு புந்தேல்கண்ட் பகுதியை அரசாண்டார். [8]

Remove ads

சந்தேல ஆட்சியாளர்கள்

Remove ads

சந்தேலர்களின் கட்டிடக் கலை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads