யவத்மாள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யவத்மாள் என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சி மன்றமாகும் . இது யவத்மாள் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகம் ஆகும். யவத்மாள் நகரமானது அமராவதி மாவட்ட பிரதேச தலைமையகமான அமராவதியிலிருந்து 90 கி.மீ தூரத்தில் உள்ளது. மகாராட்டிர மாநில தலைநகரான மும்பையிலிருந்து 670 கி.மீ. (420 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மராத்திய மொழியில் யவத் என்றால் மலை என்றும், மாள் என்றால் வரிசை எனவும் பொருள்படும். இந்த நகரம் நவராத்திரி பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு பிரபலமானது. துர்கா மண்டபத்தின் அலங்காரங்களில் கல்கத்தாவிற்குப் பிறகு இரண்டாவது இடத்தை இந்நகர் பெறுகின்றது. யவத்மாள் நகரத்தின் துர்கா மண்டபத்தைக் காண நாடு முழுவதில் இருந்து மக்கள் வருகின்றார்கள்.
Remove ads
புள்ளிவிபரங்கள்
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி , யவத்மாள் நகரின் மொத்த மக்கட் தொகை 116,551 ஆகும். மொத்த மக்கட் தொகையில் ஆண்கள் 58,549 பேரும், பெண்கள் 58,002 பேரும் உள்ளனர். ஆறு வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை 11,360 ஆகும். யவத்மாளின் மொத்த கல்வியறிவாளர்களின் எண்ணிக்கை 96,726 ஆகும். ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 82.9% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 80.9% ஆகவும் காணப்படுகின்றது. பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினரின் எண்ணிக்கை முறையே 19,816 மற்றும் 6,543 ஆகும். 2011 ஆம் ஆண்டில் யவத்மாளில் 26173 குடியிருப்புக்கள் காணப்பட்டன.[1]
மொழி
யவத்மாள் மாவட்டத்தின் முதன்மை மொழி மராத்திய மொழியாகும். மராத்தியின் வர்ஹாடி பேச்சுவழக்கு யவத்மாள் மக்களால் அதிகம் பேசப்படுகிறது. இருப்பினும் மாவட்டத்தில் ஏராளமான பட்டியல் மற்றும் நாடோடிப் பழங்குடியினர் இருப்பதால் கோர்மதி அல்லது பஞ்சாரி , கோண்டி ஆகிய மொழிகளும், உருது , தெலுங்கு மற்றும் கோலாமி போன்ற பிற மொழிகளும் மாவட்டத்தின் சில பகுதிகளில் பேசப்படுகின்றன.
Remove ads
காலநிலை
இந்த நகரம் கோப்பன்-கீகர் காலநிலை வகைப்பாட்டிற்கு அமைவாக வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. சராசரி ஆண்டு வெப்பநிலை 26.8 செல்சியஸ் ஆகும். யவத்மாளின் சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 946 மி.மீ. ஆகும்.[2]
யவத்மாள் நகராட்சி மன்றம்
யவத்மாள் நகராட்சி மன்றம் 1869 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் விரைவில் கலைக்கப்பட்டது. இது மீண்டும் 1894 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது மாவட்டத்தின் பழமையான நகராட்சி மன்றமாகும். திரு. எலியட் முதல் நகராட்சித் தலைவராகவும், லெப்டினன்ட் டபிள்யூ. ஹெகே துணைத் தலைவராகவும் பதவி வகித்தனர். திரு. கோவிந்த் புனாஜி பாரி என்பவர் யவத்மாள் நகராட்சி மன்றத்தின் முதல் இந்தியத் தலைவராக இருந்தார். (02-ஜனவரி -1914 முதல் 31 மே 1932 வரை). நகராட்சி மன்றத்தின் தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட முதல் தேர்தல்கள் 1934 டிசம்பர் 22 அன்று நடைபெற்றது. அதற்கு முன்னர் அது நியமிக்கப்பட்டது. [சான்று தேவை]
பொருளாதாரம்
பிரித்தானிய ஆட்சியின் போது, யவத்மாள் நகரம் மலைவாழிடமாக வகைப்படுத்தப்பட்டது . பருத்தி வித்து நீக்கல் மற்றும் அழுத்துதல் இரண்டும் யவத்மாளில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நகரம் மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமாகவும் திகழ்கின்றது. மேலும் இந்த நகரம் 29 மைல் (47 கி.மீ) தொலைவில் உள்ள தமன்கான் நிலையத்துடன் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. யவத்மாளில் உள்ள முக்கிய வணிக நிறுவனங்களில் ரேமண்ட்ஸ் தொழிற்சாலையும் அடங்கும். இத் தொழிற்சாலை காற்சட்டை சிறப்பு இழைகளை உற்பத்தி செய்கிறது. இந்த நகரில் பருத்தி மற்றும் ஜவுளித் தொழில்கள் தொடர்பான நிறுவனங்கள் அமையப் பெற்றுள்ளன.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads