யாசிர் ஷா

From Wikipedia, the free encyclopedia

யாசிர் ஷா
Remove ads

குயாசிர் ஷா (Yasir Shah (பஷ்தூ: یاسر شاه; பிறப்பு: மே 2, 1986) பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 100 இலக்குகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்தார்.[1] இடது கை கழல்திருப்பப் பந்துவீச்சாளரான இவர் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். நவீன துடுப்பாட்டத்தில் உள்ள சிறந்த கழல் திருப்பப் பந்துவீச்சாளர்களில் ஒருவர் இவர் என ஷேன் வோர்ன் தெரிவித்தார்.[2] 1986 ஆம் ஆண்டில் கைபர் பக்துன்குவாவில் பிறந்தார்.[3]

Thumb
குயாசிர் ஷா

2014 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[4] பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது . இந்தத் தொடரில் இலக்கினை வீழ்த்திய போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விரைவாக 50 இலக்குகளை வீழ்த்திய பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.

ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[5][6]

Remove ads

குடும்பம்

1986 ஆம் ஆண்டில் கைபர் பக்துன்க்வாவின் ஸ்வாபியில் ஒரு பஷ்தூன் குடும்பத்தில் பிறந்த ஷா, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் மற்றும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஃபவாத் அகமது ஆகியோரின் உறவினர் ஆவார்.[7]

உள்ளூர் போட்டிகள் மற்றும் இருபது20

பாகிஸ்தான் முதல் தர உள்நாட்டு துடுப்பாட்ட சுற்றில் கைபர் பக்துன்க்வா துடுப்பாட்டப் அணி, அபோட்டாபாத் ரைனோஸ், பாகிஸ்தான் சுங்க துடுப்பாட்டப் அணி மற்றும் சுய் வடக்கு எரிவாயு பைப்லைன்ஸ் லிமிடெட் உள்ளிட்ட பல அணிகளுக்காக ஷா விளையாடியுள்ளார்.[8] பாகிஸ்தான் அ துடுப்பாட்ட அணிக்காகவும் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார் .[9] இவர் 2017–18 பிக் பாஷ் லீக் பருவத்திற்காக சக பாகிஸ்தானிய வீரர் சதாப் கானுடன் பிரிஸ்பேன் ஹீட் துட்ப்பாட்ட அணிக்காக விளையாடத் தேர்வு செய்யப்பட்டார். 2018–19 பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிற்கான வரைவைத் தொடர்ந்து, அக்டோபர் 2018 இல், குல்னா டைட்டன்ஸ் அணிக்கான அணியில் இடம் பெற்றார்.[10]

Remove ads

சர்வதேசப் போட்டிகள்

ஷா 2011 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. செப்டம்பர் 14 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஜிம்பாப்வேயின் தொடக்க ஆட்டக்காரர் வுசி சிபாண்டா மற்றும் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் டடெண்டா தைபு ஆகிய 2 இலக்கினை வீழ்த்தினார்.[11] ஆகஸ்ட் 2018 இல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) 2018–19 சீசனுக்கான மைய ஒப்பந்தத்தை வழங்கிய முப்பத்து மூன்று வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார் [12][13]

தேர்வுத் துடுப்பாட்டம்

2014 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். சயீத் அஜ்மல் பந்துவீச்சில் முறையானதாக இல்லை என இவர் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. எனவே அவருக்குப் பதிலாக ஷாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தப் போட்டியில் 116 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 7 இலக்குகளைக் கைப்பற்றினார். ஸ்டீவ் சிமித்தின் இலக்கினை தனது முதல் இலக்காகக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 221 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில்; 91 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 356 ஓட்டங்களில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்தத் தொடரின் முடிவில் 207 ஓட்டங்களுக்கு 12 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார்.

சூன் 2015 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இலக்கினை வீழ்த்தியதன் மூலம் 50 இலக்குகளைக் கைப்பற்றினார். இது இவரின் ஒன்பதாவது போட்டியாகும். இதன் மூலம் விரைவாக 50 இலக்குகளை வீழ்த்திய முதல் பாக்கித்தானிய வீரர் மற்றும் சர்வதேச அளவில் ஐந்தாவது கழல் திருப்பப் பந்துவீச்சாளர் னும் சாதனை படைத்தார். இதற்கு முன்பாக வக்கார் யூனிசு, முகமது ஆசிப், சபிர் அகமது ஆகியோர் பத்துப் போட்டிகளில் 50 இலக்குகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.[14]

2016 ஆம் ஆண்டில் பாக்க்கித்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. ஜூலை 2016 இல் இலார்ட்சு மைதானத்தில் , இங்கிலாந்துத்துத் துடுப்பாட்ட அணி எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் 1996 இல் முஷ்டாக் அகமதுவுக்குப் பிறகு லார்ட்ஸில் நடந்த ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஐந்து இலக்குகளைக் வீழ்த்திய முதல் கால் சுழற்பந்து வீச்சாளரர் எனும் சாதனை படைத்தார்.[15][16] மேலும் இலார்ட்சு மைதானத்தில் ஒரு போட்டியில் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.[17][18]

ஜூலை 18, 2016 அன்று, தேர்வுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர்களுக்கான ஐ.சி.சி தரவரிசையில் ஷா முதலிடத்தைப் பிடித்தார், 1996 டிசம்பரில் அகமதுவுக்குப் பிறகு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஒருவர் உதல் இடத்தினைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.[19] இவர் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் வேகப் பந்து வீச்சளரான ஜிம்மி ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி இவர் முதல் இடம் பிடித்தார். மேலும் 2005 ஆம் ஆண்டில் வார்னுக்குப் பிறகு முதல் இடம் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் எனும் சாதனையினையும் படைத்தார். இருப்பினும், எட்டு நாட்களுக்குப் பிறகு இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அவரது மோசமான செயல்திறனைத் தொடர்ந்து, இவர் நான்கு இடங்கள் குறைந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறினார்.[18]

Remove ads

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads