யாதான் மாகாணம்
சவுதி அரேபியாவின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜாசான் பிரதேசம் (Jazan Province, அரபி: جيزان, romanized: Jizan ) என்பது சவூதி அரேபியாவின் இரண்டாவது மிகச்சிறிய ( அல் பஹாவுக்குப் அடுத்த) பிராந்தியம் ஆகும். இது யேமனுக்கு வடக்கே தெற்கு செங்கடல் கடற்கரையில் 300 கி.மீ (190 மைல்) நீண்டுள்ளது. இது 11,671 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. இப்பிராந்தியத்தில் 2017 ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,567,547 பேர் வசிக்கின்றனர். [1] இப்பிராந்தியமானது நாட்டின் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதியாக உள்ளது. இதன் தலைநகரம் ஜிசான் நகரம் ஆகும். இதன் ஆளுநராக முஹம்மது பின் நாசர் பின் அப்துல்அசிஸ் ஏப்ரல் 2001 முதல் உள்ளார். [2]
இப்பிராந்தியத்துக்கு உட்பட்ட பகுதியாக செங்கடலில் 100 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. ஜிசான் பொருளாதார நகரம் என்பது ஒரு மிகப்பெரும் திட்டமாகும். இது பிராந்தியத்தின் பொருளாதாரத்தை உயர்த்தவும், சவுதி பொருளாதார வளர்ச்சியின் ஒரு பகுதியாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. [3] சவூதி அரேபியாவின் முதல் வளங்காப்புக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியான ஃபரசன் தீவுகள் இப்பிராந்தியத்துக்கு உட்பட்டது. இத்தீவுகளுக்கு குளிர்காலத்தில் ஐரோப்பாவிலிருந்து பறவைகள் வலசை வருகின்றன.
Remove ads
நிலவியல்
இப்பிராந்தியமானது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- அல்-சரவத் மலைகள், இது சுமார் 3,000 மீட்டர் வரை உயரமானவை.
- அல்ஹாசவுன் வன மாவட்டம் வளமான மேய்ச்சல் பகுதிகளால் உடைக்கப்பட்ட காடுகளைக் கொண்டுள்ளது.
- காபி பீன்ஸ், தானிய பயிர்கள் (பார்லி, தினை, கோதுமை) மற்றும் பழங்கள் (ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, மாம்பழம், பப்பாளி, பிளம்ஸ், ஆரஞ்சுவகை வகைகள்) உற்பத்திக்காக சமவெளிகள் குறிப்பிடப்படுகின்றன.
மலைப்பகுதிகளில் உள்ள காலநிலை 'ஆசிரின் ஈரமான காலநிலைக்கு ஒத்ததாக இருந்தாலும், ஜசான் மாகாணத்தின் கடலோரப் பகுதிகள் திஹாமா எனபடும் செங்கடல் கடலோர சமவெளியின் ஒரு பகுதியாகும். இப்பகுதியானது அநேகமாக நாட்டின் வெப்பமான இடமாக இருக்கலாம், சராசரி அதிகபட்ச வெப்பநிலை 40 ° சி (104 ° F) என சூலை மாதத்திலும், 31 ° C (88 ° F) சனவரியிலும் இருக்கும். கடலோர கடற்காயல் பகுதிகளில் அதிக ஈரப்பதம் உள்ளதால் காலநிலையானது மற்றபகுதிகளில் இருப்பதை விட ஓரளவு தாங்கக்கூடியதாக இருக்கிறது. ஆண்டுக்கு 75 மில்லிமீட்டருக்கும் (3 அங்குலங்கள்) குறைவாக மழைப்பொழிவு கொண்ட பகுதியாக சபியா மலைக்கும் கடற்கரைக்கும் இடையில் அமைந்துள்ளது.
Remove ads
மக்கள் தொகை
துணைப்பிரிவுகள்
இப்பகுதி பின்வருமாறு 14 கவர்னரேட்டுளாக பிரிக்கப்பட்டுள்ளது: [5] [6]
இனவியல்
அரபு மொழி 90% க்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது. ஜிசானின் பகுதிகள் யேமனின் ஒரு பகுதி என்று பல யேமன்கள் கூறுகின்றனர். இது சவுதி-யேமன் போரின் போது (1934) சவுதி அரேபியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது, மேலும் இமாம் யஹ்யா, தெய்ஃப் ஒப்பந்தத்தில் இப்பகுதி மீதான ஏமனின் கோரிக்கையை நிறுத்தி வைக்கபட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டின் சவுதி-யேமன் எல்லை ஒப்பந்தத்தில் இந்த பிரச்சினை முறையாகவும் இறுதியாகவும் தீர்க்கப்படும் வரை பல யேமன்கள் ஜிசானை தொடர்ந்து உரிமை கோரிவந்தனர். [7]
Remove ads
சுற்றுச்சூழல் திட்டங்கள்
2019 ஆம் ஆண்டில், இப்பகுதியில் நீர் மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களை செயல்படுத்த சவுதி அரசு 213 மில்லியன் டாலர்களை ஒதுக்கியது. இத்தகைய திட்டங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு பாதையை நிறுவுதல், கழிவுநீர் வலையமைப்பு, வீடுகளுக்கான கழிவுநீர் இணைப்புகள் மற்றும் எக்கி நிலையம் ஆகியவை அடங்கும். [8]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads