யாம்
மங்கோலியப் பேரரசின் தூதுவ அமைப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாம் (Yam, உருசியம்: Ям, மொங்கோலியம்: Өртөө, ஒர்டூ, சோதனைச்சாவடி, துர்க்: jam) என்பது செங்கிஸ் கானால் உருவாக்கப்பட்ட ஒரு தூதுவ அமைப்பு ஆகும். அதைத்தொடர்ந்து மற்ற கான்களும் இதனைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
மங்கோலிய இராணுவத் தூதர்களுக்கான உணவு, தங்குமிடம் மற்றும் உதிரிக் குதிரைகளை வழங்க சாவடிகள் பயன்பட்டன. செங்கிஸ் கான் யாம் வழித்தடங்கள் மேல் சிறப்புக் கவனம் செலுத்தினார். ஏனெனில் மங்கோலியர்களின் படைகள் மிக வேகமாக பயணம் செய்தன. எனவே அவர்களது தூதர்கள் அதைவிட வேகமாகப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. தூதர்கள் ஒரு நாளைக்கு 200-300 கி.மீ.களைக் கடந்தனர். தகவல் தொடர்பு மற்றும் உளவுத்துறையை (தகவல் சேகரிப்பது) வேகப்படுத்துவதற்காக இவ்வழித்தடங்கள் பயன்பட்டன.
கோல்டன் ஹோர்டே நாடோடிக் கூட்டம் சிதைந்த பின்னர் இந்த அமைப்பு உருசியாவின் சாராட்சியில் பயன்பட்டது.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads