யார்லங் சாங்போ ஆறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யார்லங் சாங்போ ஆறு
யார்லங் சாங்போ ஆறு திபெத்தில் உள்ள நீளமான ஆறு ஆகும். சாங்போ என்ற பெயர் இந்த ஆறு சாங் என்ற இடத்தின் வழியாகப் பாய்வதால் இந்த ஆற்றுக்கு சாங்கோ என்று பெயர் வந்தது. இந்த ஆறு பிரம்மபுத்ரா ஆற்றின் மேற்பகுதியில் பாய்கிறது. இந்த ஆறு திபெத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஆங்சி பனிக்கட்டி மலையிலிருந்தும், கைலாசமலை மற்றும் மானசோரவர் ஏாியின் தென்கிழக்குப் பகுதியில் இருந்தும் உருவாகிறது.இந்த ஆறு அருணாச்சலப்பிரதேசத்திற்குள் நுழைவதற்கு முன்னால் தெற்கு திபெத் பள்ளத்தாக்குப் பகுதியையும் உருவாக்குகிறது.
ருணாச்சலப்பிரதேசத்திலிருந்து கீழ் நோக்கிப் பாயும் போது இந்நதி அகண்டு பாய்கிறது.இங்கு இந்நதி பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது.அசாமிற்குள் நுழைந்தவுடன் இந்நதி பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது.அசாமிலிருந்து வங்காளத்திற்குள் ராம்னபஜார் என்ற இடத்தில் நுழைகிறது.200 வருடங்களுக்கு முன்பிருந்து இந்த ஆறு இவ்விடத்திலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து பைரஸ் உபசில்லாவுக்கு அருகில் மேக்னா ஆற்றுடன் கலக்கிறது.தற்பொழுது இவ்வாறு யமுனை என்று அழைக்கப்படுகிறது.இது தெற்கு நோக்கிப் பாய்ந்து கங்கையில் கலக்கிறது. வங்காளத்தில் இந்நதி பத்மா என்று அழைக்கப்படுகிறது.திபெத் பீடபூமியை விட்டு வெளியேறி இந்த ஆறு அழகான யார்லங் சாங்போ என்ற உலகிலேயே மிகப் பெரிய பள்ளத்தாக்கை உருவாக்குகிறது.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Bibliography
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads