யூசேபியஸ் (திருத்தந்தை)
திருத்தந்தை From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தந்தை யூசேபியஸ் (Pope Saint Eusebius) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 309 ஏப்பிரல் 18ஆம் நாளிலிருந்து 309 அல்லது 310 ஆகத்து 17ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.[1] இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் முதலாம் மர்செல்லுஸ் என்பவர்.[2] திருத்தந்தை யூசேபியஸ் கத்தோலிக்க திருச்சபையின் 31ஆம் திருத்தந்தை ஆவார்.[3]
- எஉசேபியோஸ் (பண்டைக் கிரேக்கம்: Εὐσέβιος; இலத்தீன்: Eusebius) என ஒலிக்கும் கிரேக்கப் பெயருக்கு "பக்தர்", "அடியார்" என்பது பொருள். அது எஉ (εὖ = நன்கு), செபெய்ன் (σέβειν = மதித்தல்) என்னும் கிரேக்கச் சொற்களை மூலமாகக் கொண்டது.
Remove ads
யூசேபியசின் பணிக்காலம்
திருத்தந்தை யூசேபியஸ் பற்றிய குறிப்புகள் திருச்சபையின் 37ஆம் திருத்தந்தையான முதலாம் தாமசுஸ் என்பவர் பொறித்த கல்லறைக் கல்வெட்டிலிருந்து தெரியவருகின்றன. அதன்படி, திருத்தந்தை முதலாம் மர்செல்லுஸ் காலத்தில் இருந்த நிலை யூசேபியஸ் ஆட்சியின்போதும் தொடர்ந்தது.[4]
தியோக்ளேசியன் மன்னன் கிறித்தவர்களைத் துன்புறுத்தியபோது அவர்களுள் பலர் தம் உயிரைக் காக்கும் பொருட்டு கிறித்தவ மதத்தை மறுதலித்திருந்தனர். அவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்கலாமா என்பது பெரிய பிரச்சினை ஆயிற்று. சிலர் தவறிப்போன கிறித்தவர்களைத் திருச்சபையில் மீண்டும் சேர்க்கக்கூடாது என்று வாதாடினர். சிலர் அவர்களை நிபந்தனையின்றி ஏற்கவேண்டும் என்றனர். மேலும் சிலர் தவறிழைத்த கிறித்தவர்கள் தங்கள் தவற்றுக்கு மனம் வருந்தி, தகுந்த ஒறுத்தல் முயற்சி மேற்கொண்டால் அவர்களைத் திருச்சபையில் மீண்டும் சேர்க்கலாம் என்றனர். இக்கருத்தைத் திருத்தந்தை யூசேபியஸ் ஆதரித்தார்.
ஆனால் ஹெராக்ளியஸ் என்றொருவரும் அவருடைய குழுவினரும் யூசேபியசின் அணுகுமுறையைக் கடுமையாக எதிர்த்தனர். திருச்சபையை விட்டுச் சென்றவர்களுக்குக் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வாதாடியதாகத் தெரிகிறது. இதனால் கட்சிப் பிளவுகளும் பெரும் குழப்பமும் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. பலர் உயிரிழந்தனர். நாட்டில் ஒழுங்கு ஏற்படுத்தும் சாக்கில் மக்சேன்சியுஸ் மன்னன் ஹெராக்ளியசையும் யூசேபியசையும் சிசிலித் தீவுக்கு நாடு கடத்தினான். வன்முறையைப் பயன்படுத்தி குழப்பத்தை அடக்கினான்.
Remove ads
இறப்பும் திருவிழாவும்
நாடுகடத்தப்பட்ட நிலையில் யூசேபியஸ் இறந்தார். அவர் இறந்த நாள் 309 (அல்லது) 310, அக்டோபர் 21 என்று கணிக்கப்படுகிறது. வத்திக்கான் பட்டியல் கணிப்புப்படி, அவர் 309/310 ஆகத்து 17ஆம் நாள் இறந்தார்.
அவருடைய உடல் உரோமைக்குக் கொண்டுவரப்பட்டு, கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
புனித யூசேபியசின் திருவிழா செப்டம்பர் 26ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads