யோக தட்சிணாமூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யோக தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். யோக நிலையைப் பிரம்ம குமாரர்களுக்குக் கற்பித்து அத்தகைய யோக நிலையில் இருந்துக் காட்டிய உருவமே யோக தட்சிணாமூர்த்தியாகும். திருவுருவக் காரணம்![]() பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க வேண்டினர் நால்வரும். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப்பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார். யோகத்தினை புரிந்துகொள்ள யோகநிலையில் இருந்துகாட்டினார். இவ்வாறு சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக யோக நிலையில் இருந்த தருணத்தினை யோக தட்சிணாமூர்த்தி என்று வழங்குகின்றனர்.[1] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads